40 பந்தில் 79 ரன் விளாசல்! வீணான அரைசதம்..தொடரை வென்ற அவுஸ்திரேலியா
மகளிர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வென்று அவுஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.
அதிரடியில் மிரட்டிய டஹ்லியா மெக்ராத்
பிரிஸ்பேனில் மகளிர் அவுஸ்திரேலியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி நடந்தது.
முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய டஹ்லியா மெக்ராத் 34 பந்துகளில் 65 ஓட்டங்கள் விளாசினார். எல்லிசி பெர்ரி 40 (30) ஓட்டங்களும், போஎபே லிட்ச்பீல்டு 36 (17) ஓட்டங்களும் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் ஷமில்லா கான்னெல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Dropped on the rope! That's a 25-ball fifty for Tahlia McGrath #AUSvWI pic.twitter.com/aKLD87k6jN
— cricket.com.au (@cricketcomau) October 5, 2023
ஹேலே மேத்யூஸ் சரவெடி ஆட்டம்
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியில் ஹேலே மேத்யூஸ் சரவெடியாய் அவுஸ்திரேலிய பந்துவீச்சை தாக்கினார். ஆனால் மறுமுனையில் வீராங்கனைகள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து நொறுக்கிய ஹேலே மேத்யூஸ் 40 பந்துகளில் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 79 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
My word! Hayley Matthews is at it again.
— cricket.com.au (@cricketcomau) October 5, 2023
50 off 29 and she's looming very large at AB Field #AUSvWI pic.twitter.com/OfsdiCtsKV
டர்சி பிரௌன், அஷ்லேய் கார்ட்னர் மற்றும் கிம் கார்த்தின் தாக்குதல் பந்துவீச்சில் மேற்கிந்திய தீவுகள் 143 (19.5) ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
கடைசி விக்கெட்டாக வெளியேறிய ஆலியா 26 (23) ஓட்டங்கள் எடுத்தார். அவுஸ்திரேலியா தரப்பில் டர்சி பிரௌன், அஷ்லேய் கார்ட்னர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
Twitter (Windies)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |