Wayanad landslide: குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து தனியாளாய் நிற்கும் நபர்
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து நபர் ஒருவர் தனியாக நிற்கிறார்.
இந்திய மாநிலமான கேரளா, வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் மேப்பாடி, முண்டக்கை டவுன் மற்றும் சூரல்மலா ஆகிய மூன்று பகுதிகளில் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதில், முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வெள்ளத்தில் வீடுகளும் அடித்துச் செல்லப்பட்டன.
16 பேரை இழந்த நபர்
இந்நிலையில், நிலச்சரிவில் குடும்பத்தில் உள்ள 16 பேரையும் இழந்து மன்சூர் (42) என்ற நபர் தவித்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.
இதில் உயிரிழந்த 16 பேரில் மன்சூரின் தாய், மனைவி, தங்கை, 2 குழந்தைகளும் அடங்குவர். தாய், மனைவி, தங்கை, மகனின் உடல்கள் மட்டுமே தற்போது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள மற்ற 12 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்ட போது மன்சூர் வெளியூருக்கு சென்றதால் அவர் மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
இதுகுறித்து மன்சூர் கூறுகையில், " இந்த நிலச்சரிவு மொத்த உலகத்தையும் அடித்து சென்றுவிட்டது. என்னுடைய குடும்பம், என்னுடைய வீடு உள்ளிட்ட அனைத்தும் என்னை விட்டு சென்று விட்டது" என்று சோகத்துடன் பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |