தொப்பையை சட்டென கரைக்கும் தேங்காய் எண்ணெய்! எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

cholesterol weight loss belly fat
By Kishanthini Jun 23, 2021 05:35 AM GMT
Report

 இன்றைய காலக்கட்டத்தில் உலக மக்களில் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேரும்போது உடல் பருமன் ஏற்படுகிறது. நமது உடல் எடையானது அளவிற்கு அதிகமாக அதிகரிக்கும்போது அது நமது உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

 இதயநோய், நீரிழிவு, புற்றுநோய் போன்ற அபாயகாரமான நோய்களை ஏற்படுத்துகின்றது. எனவே சரியான அளவில் நமது உடல் எடையை பராமரிப்பது அவசியமானது ஆகும்.

இதற்கு டயட்டுகள், உடற்பயிற்சிகள் மட்டும் போதாது. ஒரு சில இயற்கை உணவு பொருட்களை எடுத்து கொள்வது நல்லது. அதில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய். இது காலங்காலமாக உடல் எடையை குறைக்க பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இது எப்படி உடல் எடையை குறைக்க பயன்படுகின்றது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

தொப்பையை சட்டென கரைக்கும் தேங்காய் எண்ணெய்! எப்படி பயன்படுத்துவது தெரியுமா? | Ways To Uses Of Coconut Oil For Your Belly Fat

​தேங்காய் எண்ணெய் கொழுப்பை குறைக்க எவ்வாறு உதவுகின்றது? 

  •  லாரிக் அமிலமானது உயர் அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் அல்லது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன. இதனால் இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கிறது.  

  • தேங்காய் எண்ணெய் பசியை அடக்கவும் கொழுப்பு இழப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் இது கொழுப்பை குறைக்க உதவுகிறது என சில ஆதாரங்கள் கூறுகின்றன. 

  •  தேங்காய் எண்ணெயில் ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக உள்ளன. அவை விரைவாக உறிஞ்சப்படுவதால் அவை கலோரி எரிவதை அதிகரிக்கின்றன. எனவே சோயாபீன் எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்கு பதில் தேங்காய் எண்ணெயை மாற்றுவதன் மூலம் உங்கள் இடுப்பின் சுற்றளவை குறைக்க முடியும். 

  •   ஆனாலும் தேங்காய் எண்ணெயில் கலோரிகள் அதிகமாக இருப்பதால் அதை அதிக அளவு சாப்பிட்டால் எளிதில் எடை அதிகரிக்கும் அபாயமும் இருக்கத்தான் செய்கிறது. எனவே தேங்காய் எண்ணெயை குறைவாக பயன்படுத்தவும்.

​எவ்வளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக்கொள்ள வேண்டும்?

  •   ஒரு ஆய்வில் வயிற்றில் தொப்பை ஏற்பட்ட பெண்கள் தங்கள் உணவில் ஒரு நாளைக்கு 2 தேக்கரண்டி (30 மி.லி) தேங்காய் எண்ணெயை சேர்த்துக்கொண்டனர். இப்படியே 12 வாரங்கள் தொடர்ந்தது. 12 வாரங்களுக்கு பிறகு சோயாபீன் எண்ணெய் பயன்படுத்தும் பெண்களோடு இவர்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டனர். அப்போது தேங்காய் எண்ணெய் சாப்பிட்ட பெண்கள் சோயாபீன் எண்ணெய் பயன்படுத்திய பெண்களை விடவும் இடுப்பு சுற்றளவு குறைந்து காணப்பட்டனர்.

  •   மற்றொரு ஆய்வில் 4 வாரங்கள் 20 பருமனான ஆண்கள் ஒரு நாளைக்கு அதே 2 தேக்கரண்டி (30 மி.லி) தேங்காய் எண்ணெயை பயன்படுத்தினர். அந்த ஆண்களும் 4 வாரங்களில் 2.54 செ.மீ அளவு இடுப்பு சுற்றளவு குறைந்து இருந்தனர். 

​பயன்படுத்துவதற்கான சில ஆரோக்கியமான வழிகள்

  •  சூடான நீரில் அல்லது மூலிகை தேநீரில் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேங்காய் எண்ணெயை சேர்த்து அதை காலையில் குடிக்கவும். தேங்காய் எண்ணெயின் வாசனை சிலருக்கு பிடிப்பதில்லை. இதனால் அவர்கள் தேங்காய் எண்ணெயில் சமைப்பதை விரும்புவதில்லை. அவர்களுக்கு உணவில் தேங்காய் எண்ணெயை சேர்க்க இது சுலபமான வழி ஆகும்.

  •  மிருதுவான அல்லது இனிப்பு போன்ற உங்களுக்கு பிடித்த உணவுகளை செய்யும்போது வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். நீங்கள் தேங்காய் எண்ணெயை சாலட் செய்வதற்கும் பயன்படுத்தலாம்.

  • உணவு நேரத்திற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு தேங்காய் எண்ணெயை உட்கொள்வது பசியை குறைக்கும். இதனால் பசியை நம்மால் கட்டுப்படுத்த முடியும். எடை குறைக்கவும் இது உதவும்.
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், கொழும்பு, சிட்னி, Australia, Pinner, United Kingdom

08 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை 2ம் வட்டாரம், வவுனியா

14 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toulouse, France

11 Oct, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மல்லாகம், புத்தளம், Melbourne, Australia

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சுழிபுரம்

26 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US