கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை வழிபடும் முறை!
கிருஷ்ண ஜெயந்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் இந்து சமய விழாவாகும்.
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாளில் இவ்விழா நிகழ்கிறது. ஆகத்து அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ணா செயந்தி கொண்டாடுகிறார்கள்.
கோகுலாட்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணரை வழிபடும் முறை
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் விரதம் இருக்க வேண்டும்.
இரவில் கிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
மறுநாள் மீண்டும் கிருஷ்ணரை பூஜித்து வழிபட்டு, அன்னதானம் செய்ய வேண்டும்.அதன் பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
கிருஷ்ணருக்கு பூக்களை அர்ப்பணிக்கும்போது மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
அப்போது பூவின் காம்பு கிருஷ்ணரை நோக்கி இருக்க செய்ய வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணரை மூன்று முறை பிரதட்சணம் செய்ய வேண்டும்.
கிருஷ்ணரின் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் மகிமை வாய்ந்தது. அதன் ஆற்றல் அளவிட முடியாதது. எனவே சுதர்சன சக்கரத்தையும் மறக்காமல் வழிபட வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |