அயர்லாந்துக்கு மரண அடி கொடுத்து ஒயிட்வாஷ் செய்த வங்காளதேச அணி
டாக்காவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் மகளிர் வங்காளதேசம் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.
கேபி லீவிஸ் 52
மகளிர் அயர்லாந்து அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.
முதலில் ஆடிய அயர்லாந்து அணி 50 ஓவரில் 185 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கேபி லீவிஸ் 79 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்தார். ஃபஹிமா காதுன் 3 விக்கெட்டுகளும், சுல்தானா காதுன் மற்றும் நஹிதா அக்தர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
ஷர்மின் அக்தர் அதிரடி
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணியில் முர்ஷிதா காதுன் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷர்மின் அக்தர் அதிரடி காட்டினார்.
மறுமுனையில் பர்கானா ஹோயூ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தக் கூட்டணி 143 ஓட்டங்கள் குவித்தது.
அரைசதம் அடித்த ஷர்மின் அக்தர் (Sharmin Akhter) 88 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அதனைத் தொடர்ந்து பர்கானா ஹோயூ (Fargana Hoque) 6 பவுண்டரிகளுடன் 61 (99) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.
💫 Sharmin Akhter’s Golden Form Continues!
— Bangladesh Cricket (@BCBtigers) December 2, 2024
Another brilliant half-century from Sharmin Akhter—her 2nd of the series and the 5th in her ODI career. Consistency and class personified! 🏏✨#BCB #BANWvIREW #HomeSeries #odiseries #womenscricket pic.twitter.com/GBnBdAphVY
எனினும் நிகர் சுல்தானா 18 ஓட்டங்களும், சோபனா மோஸ்தரி 7 ஓட்டங்களும் எடுக்க, வங்காளதேசம் 37.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 186 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேச அணி 3-0 என கைப்பற்றி அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
Farzana Hoque brings up her 13th ODI half-century and her 2nd of the series against Ireland Women. 🏏✨#BCB #BANWvIREW #HomeSeries #odiseries #womenscricket pic.twitter.com/rIUQeOIBD8
— Bangladesh Cricket (@BCBtigers) December 2, 2024
பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதை ஷர்மின் அக்தரும், பிளேயர் ஆஃப் தி சீரிஸ் விருதை பர்கானா ஹோயூக்கும் பெற்றனர்.
Bangladesh Women vs Ireland Women | 3rd ODI
— Bangladesh Cricket (@BCBtigers) December 2, 2024
Bangladesh won the match by 7 Wickets & the Series 3-0 (3) 🇧🇩 👏
Match Details 👉: https://t.co/SxCaOp9vjT#BCB #BANWvIREW #HomeSeries #odiseries #womenscricket pic.twitter.com/SBCLkPOJVV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |