114 ரன் வித்தியாசத்தில் மலேசிய அணியை வீழ்த்திய வங்கதேசம்! தம்புள்ளையில் இமாலய வெற்றி
மகளிர் ஆசியக்கிண்ணத் தொடரின் இன்றையப் போட்டியில் வங்கதேச அணி 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மலேசியாவை வீழ்த்தியது.
முர்ஷிதா காதுன், நிகர் சுல்தானா ருத்ரதாண்டவம்
தம்புள்ளையில் நடந்த இப்போட்டியில் வங்கதேச அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியது.
அதிரடி காட்டிய டிலரா அக்தர் 20 பந்துகளில் 33 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து முர்ஷிதா காதுன் மற்றும் நிகர் சுல்தானா ருத்ரதாண்டவம் ஆடினர்.
FIFTY!! ?
— Female Cricket (@imfemalecricket) July 24, 2024
Back-to-back half-centuries for Murshida Khatun as Bangladesh are off to a solid start against Malaysia ?? #CricketTwitter #WomensAsiaCup2024 ?ACC pic.twitter.com/cqDdEdtwmM
இதன்மூலம் வங்கதேச அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. முர்ஷிதா 59 பந்துகளில் ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 80 ஓட்டங்களும், நிகர் சுல்தானா 37 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் விளாசினர்.
Skipper Nigar Sultana Joty joins the party ?
— Female Cricket (@imfemalecricket) July 24, 2024
8th T20I fifty overall, 2nd in Asia Cup. #CricketTwitter #WomensAsiaCup2024 ?ACC pic.twitter.com/QiKvi3v4uu
இமாலய வெற்றி
பின்னர் ஆடிய மலேசிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து, 8 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
6 அடி 4 அங்குல சுழற்பந்து வீச்சாளராக இருக்க நன்றியுள்ளவனாக இருக்கிறேன்: ஒரே போட்டியில் ஹீரோவான வீரர்
வங்கதேச அணியின் தரப்பில் நஹிதா அக்தர் 2 விக்கெட்டுகளும், ஜஹனாரா, சபிகுன், ரபேயா, ரித்து மற்றும் ஷோர்னா அக்தர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Career-best T20I score for Murshida Khatun ?
— Female Cricket (@imfemalecricket) July 24, 2024
She now equals Mithali Raj's record for Most Fifties (3) in the T20 Asia Cup format. #CricketTwitter #WomensAsiaCup2024 ?ACC pic.twitter.com/mYHd0fhYnm
Bangladesh secure a convincing 114-run victory over Malaysia.
— Female Cricket (@imfemalecricket) July 24, 2024
Nigar Sultana (62) and Murshida Khatun (80) lead the way with their brilliant knocks!#CricketTwitter #WomensAsiaCup2024 #BANvMAL ?ACC pic.twitter.com/UDSTnUmA9c
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |