டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகள் தான் மோதும்! துணிச்சலாக கூறிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் மோதும் அணிகள் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் படேல் துணிச்சலாக கருத்து தெரிவித்துள்ளார்.
பார்த்தீவ் படேல் கூறியதாவது, நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றிப்பெற்றது இந்தியாவுக்கு நல்லது தான்.
ஒரே ஒரு போட்டியில் தோல்வியடைந்துள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, உலகக் போட்டியில் மற்ற போட்டிகளில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள்.
ஆனால் நான் இந்திய டிரஸ்ஸிங் அறையில் இருந்திருந்தால், மற்ற போட்டிகளைப் பற்றி நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன்.
உலகக் கோப்பையில் விளையாடும் போது நமது விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும் என இந்திய அணிக்கு தெரியும் என நான் உறுதியாக நம்புகிறேன். நியூசிலாந்து வென்றதா அல்லது பாகிஸ்தான் வென்றதா என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.
2021 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் வாய்ப்பு இருப்பதாக படேல் துணிச்சலாக கூறினார்.
இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதுவதை நாம் பார்க்கப் போகிறோம். போட்டியில் இருக்கும் இரண்டு சிறந்த அணிகள் இவை. இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளும் இருக்கும் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.