இந்திய அணிக்காக வீரர்களை உருவாக்குகிறோம்! சாதித்து காட்டிய தமிழன் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி
சையது முஷ்டாக் அலி தொடரின் இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற தமிழக அணிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்காக வீரர்களை உருவாக்குகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரின், இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணி, தன்னை எதிர்த்து விளையாடிய பரோடா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
கடந்த 2007-ஆம் ஆண்டுக்கு பின், தமிழ்நாட்டு இப்போது கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அணியின் கேப்டன் ஆன தினேஷ் கார்த்திக் தான், அவர் அணியை திறம்பட வழிநடத்தியதன் காரணமாக தமிழ்நாடு கோப்பையை வெல்ல முடிந்தது.
இது குறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், எங்களது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் இளம் வீரர்களின் சிறப்பான திறமை தான், இந்த போட்டி இந்திய அணிக்காக சிறந்த வீரர்களை உருவாக்கிக் கொடுக்கிறது.
இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இன்னும் என்னிடம் குறையவில்லை. இந்திய அணிக்காக எப்போது அழைத்தாலும் நான் சென்று விளையாட தயாராக உள்ளேன் என்று கூறியுள்ளார்.
