எங்களுக்கு ரஷ்யாவுடன் போர் இல்லை... பின்வாங்குகிறதா பிரான்ஸ்?
எங்களுக்கு ரஷ்யாவுடன் போர் இல்லை என்று பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் அறிவிப்பு
நேற்று முன்தினம், 14 Leopard 2 tanks என்னும் போர் வாகனங்களை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக ஜேர்மனி தெரிவித்தது. அது தொடர்பில் பேசிய ஜேர்மன் வெளியுறவு அமைச்சரான Annalena Baerbock, மேற்கத்திய கூட்டாளிகள் இணைந்து உக்ரைனுக்கு இராணுவ உதவியை ஒருங்கிணைப்பது அவசியம் என்றார்.
அத்தியாவசியமான விடயம் என்னவென்றால், நாம் அதை இணைந்து செய்யவேண்டும், ஒருவரையொருவர் குற்றம்சொல்லிக்கொண்டிருக்கக்கூடாது, ஏனென்றால், நாம் ரஷ்யாவுக்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறோமே ஒழிய, ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் அல்ல என்றார் அவர்.
ஜேர்மனியைத் தொடர்ந்து அமெரிக்கா முதலான நாடுகளும் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க முன்வந்துள்ளன.
இந்நிலையில், உக்ரைனுக்கு இப்படி ஆயுதங்கள் வழங்குவதை, நேரடியாக போரில் தலையிடுவதாகத்தான் ரஷ்யா எடுத்துக்கொள்வதாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
image - Representationa
பின்வாங்குகிறதா பிரான்ஸ்?
ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் இப்படி பேசியதற்குப் பிறகுதான், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான Anne-Claire Legendre, பிரான்சுக்கோ அல்லது எங்கள் கூட்டாளிகளுக்கோ ரஷ்யாவுக்கெதிராக போர் இல்லை என்று கூறியுள்ளார்.
இராணுவ தளவாடங்கள் கொடுப்பது, போரிடும் ஒரு நட்பு நாட்டுடன் இணைந்து போரிடுவதற்கு சமம் அல்ல என்று கூறியுள்ளார் அவர்.
ஆக, Anne-Claire Legendre கூறுவதைப் பார்த்தால், நேரடியாக ரஷ்யாவுடன் மோத பிரான்சுக்கு விருப்பம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.