நாங்கள் இனவெறியர்கள் அல்ல... முதன்முறையாக மவுனம் கலைத்த இளவரசர் வில்லியம்
ராஜ குடும்பத்தை அதிர்ச்சியடையச் செய்த ஹரி மேகன் பேட்டிக்குப் பின், முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார் பிரித்தானிய இளவரசரும் ஹரியின் அண்ணனுமான வில்லியம்.
அமைதியாக இருங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன் என மகாராணியாரே கூறிவிட்ட நிலையில், தனிப்பட்ட பிரச்சினைகளை தள்ளிவைத்துவிட்டு மீண்டும் தங்கள் பணியைத் துவக்கியுள்ளார்கள் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும்.
பள்ளி மாணவர்களின் மன நலம் தொடர்பான திட்டம் ஒன்றிற்கு ஆதரவளிக்கும் வகையிலான பயணம் ஒன்றை மேற்கொண்ட இளவரசர் வில்லியமும் கேட்டும், கிழக்கு லண்டனிலுள்ள பள்ளி ஒன்றிற்கு வருகை புரிந்திருந்தார்கள்.
அப்போது அவர்களிடம் ஊடகவியலாளர்கள் ஹரி மேகன் பேட்டி குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அவர்களிடம், ராஜ குடும்பத்தார் இனவெறியர்கள் அல்ல என்று கூறினார் வில்லியம்.
அத்துடன், ஹரியிடமோ மேகனிடமோ பேசினீர்களா என்று கேட்டதற்கு, இன்னும் பேசவில்லை, ஆனால் பேசுவேன் என்றார் வில்லியம்.


