நாங்க பயப்படல....திருப்பி கொடுப்போம்! இந்தியாவை எச்சரிக்கும் இங்கிலாந்து பயிற்ச்சியாளர்
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பேசியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது இப்போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.
குறிப்பாக இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்களிடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. இதுவே இந்திய அணிக்கு உத்வேகத்தை கொடுத்ததாகவும், அது தான் இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் Chris Silverwood கூறுகையில், நாங்கள் சண்டைக்கு பயப்படவில்லை, அவர்கள் எங்களை பின் தள்ள முயற்சித்தால், அவர்களை எங்கள் வீரர்கள் பின்னோக்கி தள்ளிவிடுவார்கள் என்று எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், அவர்கள் எங்களை வீழ்த்த நினைத்தால், நாங்களும் அவர்களை பின்னுக்கு தள்ளுவோம். சண்டைக்கு நாங்கள் பயப்படவில்லை, இந்த டெஸ்ட் போட்டியில் சில இடங்களில் பின்வாங்கிவிட்டோம்.
உணர்ச்சிகள் அதிகமாக இருந்தன. அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை, முதல் இன்னிங்ஸில் அவர்கள் ஜேமி ஆண்டர்சனை குறிவைத்தனர்.
இதனால் நாங்கள் அவர்களை கடுமையாக திருப்பி கொடுத்தோம். அதில் சிறு வித்தியாசம் எங்கள் கடைசி கட்ட வீரர்களும், அவர்களுக்கும் சிறு வித்தியாசம் ஏற்பட்டுவிட்டது.
இதில் இருந்து நாங்கள் கற்றுகொள்வோம், வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை எதிர் நோக்கி ஆர்வமுடன் காத்திருக்கிறோம், இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இடையே நிறைய இடைவெளி கிடைத்துள்ளது.
இதனால் வீரர்கள் அவர்கள் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருடன் நேரத்தை கழித்துவிட்டு, ஒரு தெளிவான மனநிலையில் திரும்புவார்கள், அது அணிக்கு பெரிய அளவில் மாற்றத்தை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.