இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது! அவுஸ்திரேலிய கிரிக்கெட் அதிரடி
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மீது இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர்கள் முகம்மது சிராஜ் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் மீது பார்வையாளர்கள் இனவெறி கருத்துக்களை கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
டெஸ்ட் போட்டியின் 4 வது நாளான இன்றும் சில ரசிகர்கள் இனவெறியை தூண்டும் வகையில் பேசியதால், கவனத்தை ஈர்க்கும் வகையில் 10 நிமிடங்கள் முகமது சிராஜ் பந்து வீசுவதை நிறுத்தினார். இது தொடர்பாக இந்திய கேப்டன் ரஹானே நடுவர்களிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இனவெறி புகாருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. அதில், இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது.
இந்திய வீரர்களை குறிவைத்து இனவெறியை தூண்டும் வகையில் செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி. இனவெறியை ஆதரிப்பவர்களை அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதிக்காது.
இந்திய கிரிக்கெட் அணி நண்பர்களிடம் நாங்கள் வருத்தங்களை பதிவு செய்கிறோம். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.