காபூல் விமான நிலையத்தில் ஆப்கானியர்களிடமிருந்து பிரித்தானியா வீரர்கள் பச்சிளம் குழந்தையை வாங்கியது ஏன்.. ஏதற்காக? உண்மை உடைத்த பாதுகாப்பு செயலாளர்
ஆப்கானிஸ்தானிலிருந்து ஆதரவற்ற குழந்தைகளை பிரித்தானியாவால் வெளியேற்ற முடியாது என பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் விளக்கமளித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குவிந்த ஆப்கானியர்கள், பாதுகாப்பு வேலியை தாண்டி விமான நிலையத்திற்கு உள்ளே இருக்கும் பிரித்தானியா மற்றும் அமெரிக்க இராணுவ வீரர்களிடம் குழந்தைகளை ஒப்படைத்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
நம்பிக்கையற்ற பெற்றோர்கள், தலிபான்கள் ஆட்சி பிடியில் தங்கள் குழந்தைகள் சிக்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில், குழந்தைகளை மட்டும் நாட்டை விட்டு வெளியேற்ற இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்ததாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இணையத்தில் பரவிய வீடியோ குறித்து பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் விளக்கமளித்துள்ளார்.
அதாவது, ஆப்கானிஸ்தானிலிருந்து குடும்பத்தினரின்றி ஆதரவற்ற குழந்தைகளை பிரித்தானியாவால் வெளியேற்ற முடியாது.
அந்த வீடியோவில் வீரர் குழந்தையை வாங்கிக் கொண்டார், காரணம் குழந்தையின் குடும்பமும் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படும் என்பதால் இருக்கும்.
அந்த கூட்டத்தை கடந்து விமான நிலையத்திற்கு நுழைவது சவாலாக இருக்கும், நாங்கள் இந்த பிரச்சினையை கையாள வேறு வழிகளைக் கண்டறிந்து வருகிறோம், ஆனால் கூட்டம் கூடி விடுகிறது.
சில ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற விரக்தியில் இருக்கின்றனர்.
People are so desperate to escape the #Taliban that they’re passing babies and kids forward to the gate at #Kabul airport. #kabulairport #AfghanEvac pic.twitter.com/6NSlIffrD1
— Matt Zeller (@mattczeller) August 18, 2021
இதனால், விமான நிலையத்தில் உள்ள பிரிட்டிஷ் வீரர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வதாக பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் கூறினார்.