யாரையும் நாங்கள் கூட்டணிக்கு இழுக்கவில்லை.. நேரம் வரும்போது தெரியும்: அண்ணாமலை பேச்சு
நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு இழுக்கவில்லை, விருப்பமுள்ளவர்கள் எங்களுடன் பயணம் செய்கிறார்கள் என்று அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார்.
கூட்டணி விவகாரம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 15 பேரும், முன்னாள் மக்களவை உறுப்பினர் ஒருவரும் பாஜகவில் இணைந்தனர்.
இவர்கள் மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் பாஜகவில் இணைந்துள்ளனர். அதே போல மோடி தலைமையை ஏற்று யார் வந்தாலும், அவர்களுக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் கதவு திறந்திருக்கும் என்று அமித் ஷா கூறியிருக்கிறார்.
அதனால், திமுகவோ அதிமுகவோ என்று சொல்லவில்லை. அவர்கள் எங்களின் கூட்டணிக்கு வந்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக கூட்டணிக்கு இழுக்கவில்லை. விருப்பம் உள்ளவர்கள் எங்களுடன் இருக்கிறார்கள்" என்றார்.
முதல்வர் வெளிநாடு பயணம்
மேலும் பேசிய அவர், "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 -வது முறையாக வெளிநாடு பயணம் சென்றிருப்பதால் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தான் 50 ஆண்டுகாலம் அரசியலில் இருப்பதாக டி.ஆர்.பாலு கூறுகிறார். எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தோம் என்பது முக்கியமில்லை. எப்படி இருந்தோம் என்பது தான் முக்கியம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |