இதை நாங்கள் தேர்வு செய்யவில்லை! புதிய பந்தில் இருந்த தவறை சரியாகக் கண்டறிந்த அஸ்வின்
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் இறுதி இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய அணிக்கு வழங்கப்பட்ட புதிய பந்தில் இருந்த தவறை அஸ்வின் சரியாகக் கண்டறிந்து நடுவர்களிடம் கொண்டு சென்றார்.
Centurion மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின் 4வது நாள் ஆட்டத்தின் போது, இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு சுருண்டது மற்றும் 305 ரன்களை தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்நிலையில் முதல் டெஸ்டின் கடைசி இன்னிங்ஸ் தொடங்குவதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டது, அதற்கு முக்கிய காரணம் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.
கடைசி இன்னிங்ஸை தொடங்க பும்ராவிடம் வழங்கப்பட்ட புதிய பந்தில் தவறு இருப்பதை அஸ்வின் கண்டறிந்தார்.
இந்த பந்தை நாங்கள் தேர்வு செய்யவில்லை என அஸ்வின் உடனே நடுவர்களிடம் முறையிட்டார்.
உடனடியாக அஸ்வினுடன் இந்திய கேப்டன் கோலியும் இணைந்து நடுவர்களிடம் முறையிட்டார்.
இதனையடுத்து, ஒரு பெட்டியில் ஆடுகளத்திற்கு புதிய கூக்கபுரா சிவப்பு பந்துகள் கொண்டவரப்பட்டது, அதில் இந்திய அணி பந்து வீசுவதற்கு சரியாக இருக்கும் பந்தை அஸ்வின் தேர்வு செய்து வழங்கினார்.
4வது நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
இன்று 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கவுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 211 ரன்களும், இந்திய வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவை.