பிரித்தானியர்கள் இந்த காலக்கட்டத்தில் முகக்கவசம் அணியவேண்டிய தேவை இருக்காது! கூறிய முக்கிய மருத்துவ அதிகாரி
பிரித்தானியாவில் இருக்கும் மக்கள் வரும் கோடைக் காலங்களில் கொரோனாவுக்காக முகக்கவசம் அணியவேண்டிய தேவை இருக்காது என துணை தலைமை மருத்துவ அதிகாரி Jenny Harries கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கோடை மதங்களான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று குறையுமெனில், மக்கள் இம்மாதங்களில் எல்லா நேரமும் முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என அவர் கூறியுள்ளார்.
கோடைக் காலம் பொதுவாக மிகவும் பாதுகாப்பான காலம் என்று மருத்துவர்கள் கருதுவதாகவும், அக்காலக்கட்டத்தில் தொற்றுகள் பரவுவது குறைவாக இருக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், மீண்டும் குளிர்காலங்களுக்குச் செல்லும்போது நிச்சயம் முகக்கவசத்தை நிராகரிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.