ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் தருகிறோம்... உங்கள் நாட்டுக்கு: அகதிகளுக்கு சுவிட்சர்லாந்து அறிவுறுத்தல்
சமீபத்தில், நாடுகடத்தப்படும் நிலை உருவாகும் முன், 3,000 சுவிஸ் ஃப்ராங்குகள் தருகிறோம், வாங்கிக்கொண்டு நீங்களாகவே அவரவர் தங்கள் ஊரைப் பார்த்து போய்விடுங்கள், ஏனென்றால், சுவிட்சர்லாந்தில் உங்களுக்கு புகலிடம் கிடைக்கும் வாய்ப்பு குறைவே என்று கூறும் ஒரு வீடியோ வெளியாகி உக்ரைன் அகதிகளை கலங்கச் செய்தது.
இப்போது, ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் தருகிறோம், வாங்கிக்கொண்டு உங்கள் நாட்டுக்கு சென்றுவிடுங்கள் என உக்ரைன் அகதிகளை சுவிட்சர்லாந்து அறிவுறுத்தியுள்ளது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக சுவிட்சர்லாந்தை வந்தடைந்தார்கள்.
அப்படி அகதிகளாக வந்தவர்களில் பெரும்பாலானோர் சூரிச் மாகாணத்தை சென்றடைந்தார்கள்.
Photo: FABRICE COFFRINI / AFP
இந்நிலையில், போர் முடியும் முன்னரே, அகதிகளாக வந்தவர்களை திருப்பி அனுப்பும் திட்டத்தைத் துவங்கியுள்ளது சுவிட்சர்லாந்து..
அவ்வகையில், உக்ரைனுக்குத் திரும்பிச் செல்வோருக்கு ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் வழங்குவதாக அறிவித்துள்ளது சூரிச் மாகாணம். செவ்வாயன்று சூரிச் அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். உக்ரைனுக்குத் திரும்பிச் செல்வோருக்கு, ஆளுக்கு 500 சுவிஸ் ஃப்ராங்குகள் வீதம், குடும்பம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 2,000 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நகர கவுன்சிலரான Raphael Golta கூறும்போது, புதிதாக வந்துள்ள உக்ரைனியர்களுக்குத் தேவையான விடயங்களை அளிப்பது மாகாண அதிகாரிகளுக்கு கடினமான ஒன்றாக உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.