எங்களுக்கு இவர்கள் மீதெல்லாம் நம்பிக்கை இல்லை... ஆய்வில் வெளிப்படையாக தெரிவித்துள்ள சுவிஸ் நாட்டவர்கள்
எங்களுக்கு இவர்கள் மீதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என ஆய்வு ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்கள் சுவிஸ் மக்கள்.
கறி வெட்டுபவர், கேக் செய்பவர், மெழுகுவர்த்தி தயாரிப்பவர் போன்றவர்களையெல்லாம் நாங்கள் நம்புவதேயில்லை என்கிறார்கள் சுவிஸ் மக்கள்...
சரி, யாரை அவர்கள் அதிகம் நம்புகிறார்களாம்?
தீயணைப்பு வீரர்கள் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களாம் சுவிஸ் மக்கள்!
பொதுவாக மக்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் வங்கிகளைத்தான் அதிகம் நம்புவார்கள். சுவிஸ் மக்களும் அப்படித்தான் இருப்பார்கள் என்று நினைத்தால், அப்படி இல்லையாம்!
சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, சுவிஸ் நாட்டவர்களில் (ஆய்வில் பங்கேற்றவர்களில்) 20 சதவிகிதம் பேர்தான் வங்கியாளர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என்று தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஆனால், தீயணைப்பு வீரர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என 74 சதவிகிதத்தினரும், செவிலியர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என 66 சதவிகிதத்தினரும், மருத்துவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என 64 சதவிகிதத்தினரும், பைலட்கள் நம்பிக்கைக்குரியவர்கள் என 63 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்லார்கள்.
மற்றவர்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் மக்களுடைய நம்பிக்கையைப் பெற்றவர்கள், மருந்தக ஊழியர்கள், பொதுப்போக்குவரத்து சாரதிகள், பொலிசார், விவசாயிகள் மற்றும் உணவு தயாரிப்போர்!
சரி, அரசியல்வதிகளை எவ்வளவு பேர் நம்புகிறார்கள் என்று பார்த்தால், வெறும் 14 சதவிகிதத்தினர்தான் அரசியல்வாதிகளை நம்புகிறார்களாம்.
எல்லாம் போகட்டும், மத குருமார்கள் மீதாவது நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டால், எங்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இல்லை, அதனால்தான் நாங்கள் ஆலயத்துக்கே போவதில்லை என்கிறார்கள் அவர்கள்.
சுமார் 22 சதவிகிதம் பேர் மட்டுமே மத குருமார்களை நம்புகிறார்களாம்!