இந்தியாவை ஜெயிக்கனும்னா இதை கண்டிப்பாக செய்யனும்! தோல்விக்கு பின் இயான் மோர்கன் பேட்டி
இந்தியாவை ஜெயிக்க வேண்டும் என்றால் பேட்டிங்கில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான்மோர்கன் கூறியுள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவு பெற்று, தற்போது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் இரு அணிகளுக்கிடையே நேற்று முதல் ஒருநாள் போட்டி துவங்கியது. இப்போட்டியில் இந்தியா அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், இந்த போட்டியில் நாங்கள் சரியான விடயங்களை நிறைய செய்திருக்கிறோம்.
இந்த மைதானம் சிறப்பாக இருந்ததால் இது ஒரு நல்ல என்டர்டைன்மென்ட் போட்டியாக அமைந்தது. எங்களது பந்து வீச்சுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக ஓட்டங்களை குவித்தனர்.
மீண்டும் ஒருமுறை எங்களது பேட்டிங்கில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த தோல்வி ஏற்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் விளையாடியதை விட பேட்டிங்கில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த முடியும்.
எங்களுடைய பேட்டிங் ஆர்டரில் முதல் ஏழு நபர்களை பார்த்தால் அதிரடியாக விளையாடி சதங்களை குவிக்க கூடியவர்கள்.
அதிரடியாக நாங்கள் விளையாட விரும்புகிறோம்.ஆனால் அது சில சமயங்களில் நடக்காமல் போகிறது. இனிவரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பாக செயல்பட விரும்புகிறோம். இந்த போட்டியில் எங்களது பவுலர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் பேட்டிங்கில் செய்த தவறு எங்களது தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
