நான் ஈழம் பற்றி பேசினால் அரசியல் என்றவர்கள்... - சீமான் பரபரப்பு பேச்சு
இந்திய மாநிலம் மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு எதிராக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள்
கண்டன ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசியதாவது, கண்டிப்பாக ஒவ்வொரு கலவரத்திற்கு பின்னும் பணம் தான் இருக்கும். அப்படி தான் மணிப்பூர் கலவரத்திலும் இருக்கிறது. மலை மற்றும் காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் கிறிஸ்துவர்கள். அவர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பதில்லை.
ஆனால், தரைதளத்தில் வாழும் மெய்தி இன மக்கள் இந்து கோட்பாட்டை கொண்ட மக்கள். அவர்களுக்கு, பழங்குடி மக்கள் உயிரிழந்தால் கவலையில்லை. இது போல நமக்கும் நடந்துள்ளது. வலிமையான கடற்படையை வைத்திருக்கும் நம் நாட்டில் ஓகி புயலில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
அவர்களை பற்றி எண்ணி பார்க்கவில்லை. மக்கள் போராட்டம் செய்தும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. கடைசியில் உயிரற்ற உடலையாவது கொடுங்கள், நாங்கள் நல்லடக்கம் செய்கிறோம் என்று கூறினார்கள்.
ஆனால், அவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் கிறிஸ்தவர்கள். வாக்கு அளிக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
மணிப்பூரை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது
தேச ஒற்றுமையை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர்கள் தான் இன்று தேச ஒற்றுமையை பற்றி பேசுகிறார்கள். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்தவர்கள் தான் திமுகவினர். ஆனால், இன்று மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்கள் ஆகிவிடுவதை நாம் நம்ப வேண்டாம்.
76 நாள்கள் என்ன செய்தார்கள். அங்கு பாதிக்கப்பட்ட கிறிஸ்துவர்களை பற்றி இங்கு பேசினால் கிறிஸ்தவர்களுக்காக பேசுகிறோம், உங்களுக்காக பேசுகிறோம் என்று கூறி தேர்தல் ஆதாயத்திற்கு பேசுகின்றனர்.
நான் ஈழம் பற்றி பேசினால் அரசியல்
நான் ஈழம் பற்றி பேசிய போது அரசியலுக்காக பேசுகிறார் என்று கூறியவர்கள் தான் இன்று மணிப்பூர் கலவரத்தை பற்றி தேர்தலுக்காக பேசுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், கட்டுச்சோறு கட்டிக்கொண்டு நடைபயணம் போகிறார்கள். அது எல்லாம் பழைய மாடல். ராகுல் காந்தி நடையா நடந்தார். ஒண்ணுமே நடக்கல. 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு இப்போது என்ன பிரச்னை என்று கேட்கிறார்.
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்
மணிப்பூர் கலவரத்தை பற்றி பேசினால் இங்குள்ள கிறிஸ்துவர்கள் ஒட்டு போடுவதில்லை. இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தேவாலயத்திற்கு சென்றுவிட்டு தேவனே வாரீர், வாரீர்ன்னு பாடிவிட்டு நாட்டை யாரிடமோ கொடுத்து விட்டார்கள்.
இந்த நாட்டில் நடக்கும் அநீதிக்கு முக்கியமாக கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான் பொறுப்பு. திமுகவிற்கும், காங்கிரசுக்கும் ஓட்டு போட்டு விட்டு தெருவில் விட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |