இதற்கு காரணம் யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்! சபதம் செய்த ஈரான்
தங்கள் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என ஈரான் சபதம் செய்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், சிவப்பு கடலில் ஐ.ஆர்.ஜி.சி-க்கு சொந்தமான Saviz சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
கப்பலின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட கன்னி வெடி அல்லது ஏவுகணை மூலம் தாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடத்தியது யார் என தெரியவந்த பிறகு கட்டாயம் பதிலடி கொடுப்போம் என ஈரான் ஆயுதமேந்திய படைகளின் செய்தித்தொடர்பாளர் Maj. Gen. Abu Al-Fadel Shkarji கூறினார்.
யார் தாக்குதல் நடத்தியது என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும். யார் நடத்தியது என்பதை தெளிவுப்படுத்திய பிறகு நாங்கள் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம், கண்டிப்பாக நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
எப்படியிருந்தாலும், கப்பல் மீது தாக்குதல் நடத்தபட்டது, இப்போது கப்பலுக்கு வெவ்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால் எங்கள் விசாரணைகள் மிகத் துல்லியத்துடன் முடிவடையும் வரை நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து ஒரு முடிவை எடுக்க முடியாது என Maj. Gen. Abu Al-Fadel Shkarji கூறினார்.