பலவீனமான பாஸ்வேர்ட்டால் மூடப்படும் 158 வருட பழமையான நிறுவனம் - பின்னணி என்ன?
டிஜிட்டல் யுகத்தில், சமூகவலைத்தள கணக்கு தொடங்கி ஸ்மார்ட்போன், லேப்டாப் வரை அதை பாதுகாப்பாக வைத்திருக்க அதன் பாஸ்வேர்ட் மிக முக்கியமான ஒன்று.
பாஸ்வோர்ட்டை நாம் ரகசியமாக வைத்திருந்தாலும், சைபர் குற்றவாளிகள் நமது கணக்கை ஊடுருவ முயற்சிப்பார்கள்.
சைபர் தாக்குதலில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள, வலுவான கணிக்க முடியாத பாஸ்வோர்ட்டை உபயோகிக்க வேண்டும்.
158 ஆண்டு நிறுவனம்
இந்நிலையில், 158 ஆண்டுகள் பழமையான நிறுவனம் ஒன்று, பலவீனமான பாஸ்வோர்ட்டால் நிறுவனத்தை மூட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளது.
1865 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் கே.என்.பி லாஜிஸ்டிக்ஸ்(KNP Logistics) என்ற நிறுவனம் தொங்கப்பட்டது. இந்த நிறுவனம் Knights of Old என்ற பிராண்ட்டின் கீழ் 500 லாரிகளை இயக்கி வந்தது. 700 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.
சைபர் தாக்குதல்
இந்நிலையில், Akira Gang எனப்படும் ஹேக்கர் குழு, கேஎன்பி நிறுவனத்தின் கணினி அமைப்புகளுக்குள் ஊடுருவி ஊழியரின் கடவுச்சொல்லை யூகித்து அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்றனர்.
அதன் மூலம், நிறுவனத்தின் வணிக தரவுகளை ஊழியர்கள் அணுக முடியாத வகையில் முடக்கியுள்ளனர். தரவை மீட்டெடுக்க, ஹேக்கர்கள் 5 மில்லியன் பவுண்டுகள்(இந்திய மதிப்பில் ரூ. 58 கோடி) கேட்டனர்.
ஆனால் இந்த தொகையை கேஎன்பியால் தர முடியாததால், தங்களின் தரவுகளை இழந்து நிறுவனத்தை மூட வேண்டிய நிலைக்கு சென்றுள்ளது. இதன் காரணமாக 700 ஊழியர்கள் வேலையை இழக்க உள்ளனர்.
KNP இயக்குனர் பால் அபோட்(Paul Abbott), இந்த சைபர் தாக்குதலுக்கு சமரசம் செய்யப்பட்ட பாஸ்வேர்ட் தான் காரணம் என்பதை உறுதிப்படுத்தினார்.
கேஎன்பி நிறுவனம் சைபர் தாக்குதல் காப்பீடு வைத்திருந்த போதிலும், இந்த இழப்பை ஈடுசெய்ய முடியவில்லை.
எப்படி பாதுகாப்பது?
பிரித்தானிய அரசாங்கத்தின் சைபர் பாதுகாப்பு கணக்கெடுப்பின்படி, கடந்த ஆண்டு வணிகங்களை குறி வைத்து தோராயமாக 19,000 ransomware தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
வணிகங்கள் இதுபோன்ற தாக்குதல்களுக்கு எதிராக தங்கள் டிஜிட்டல் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் (NCSC) தலைமை நிர்வாக அதிகாரி ரிச்சர்ட் ஹார்ன் வலியுறுத்தியுள்ளார்.
சைபர் தாக்குதலில் இருந்து பாதுக்காக்க, தனித்துவமான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துவது, பாஸ்வேர்ட் தவிர்த்து, உள்நுழையும் போது செல்போனுக்கு OTP வருவது MFA - Multi-Factor Authentication செயல்படுத்த வேண்டும். முக்கியமான தரவுகளை (backup) செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |