சுவிட்சர்லாந்தில் பிரித்தானியாவின் பணக்கார குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு: புதிய தகவல்
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்று என கருதப்படும் ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்தது, பலரும் அறிந்ததே.
இந்நிலையில், ஹிந்துஜா குடும்பத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட மேல் முறையீட்டு மனுவை பெடரல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரித்தானியாவின் பணக்கார குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு
பிரித்தானியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான ஹிந்துஜா குடும்பம், பதினொரு துறைகளில் கோலோச்சும் ஒரு கூட்டு நிறுவனமாகும்.
இந்தக் குழுமத்தின் உரிமையாளர்களான ஹிந்துஜா சகோதரர்களுக்கு உலகம் முழுவதும் சுமார் 37 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
ஹிந்துஜா குடும்பத்தின் உறுப்பினர்கள் மீது ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், பிரகாஷ் ஹிந்துஜா, அவரது மனைவி கமல், அவர்களது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோருக்கு நீண்ட கால சிறைத் தண்டனை வழங்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
ஹிந்துஜா குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களான பிரகாஷ் ஹிந்துஜா மற்றும் அவரது மனைவி கமலுக்கு நான்கரையாண்டுகளும், தம்பதியரின் மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு நான்கு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
புதிய தகவல்
இந்நிலையில், ஹிந்துஜா குடும்பம் சார்பில் பெடரல் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேர் ஆஜராகாமலே,ஜெனீவா நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையைத் துவக்கிவிட்டதாகக் கூறி அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால், பெடரல் நீதிமன்றம் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
அத்துடன், ஜெனீவா நீதிமன்ற நீதிபதிகள் பாரபட்சமாக நடந்துகொண்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் பெடரல் நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்துவிட்டார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |