சுவிஸ் தங்க விசா: சில சுவாரஸ்ய தகவல்கள்
சுவிஸ் குடியுரிமை பெறுவது எவ்வளவு கடினம் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.
ஆனாலும், நிறைய பணம் வைத்திருந்தால் போதும், சுவிட்சர்லாந்தில் குடியமரலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
நிறைய பணம் வைத்திருந்தால்...
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பிலுள்ள நாடுகளைச் (EFTA) சேர்ந்தவர்களைத் தவிர மற்ற நாட்டவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ அனுமதி பெறுவது கடினம்.
என்றாலும், நீங்கள் பெரிய பணக்காரராக இருந்தால் அதுவும் சாத்தியம்தான்!
சுவிஸ் சட்டப்படி, மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெரும் பணக்காரர்களாக இருக்கும் பட்சத்தில் சுவிட்சர்லாந்தில் வேலை செய்யவோ, அரசு உதவி பெறவோ தேவையில்லாத அளவுக்கு அவர்களிடம் பணம் இருக்குமானால், அவர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ அந்நாடு அனுமதியளிக்கிறது.
OMAR HAJ KADOUR / AFP
அத்தகைய பணக்காரர்களுக்கு B குடியிருப்பு அனுமதி வழங்கப்படும் என்கிறது சுவிஸ் சட்டம். அதுதான், தங்க விசா என அழைக்கப்படுகின்றது.
2024ஆம் ஆண்டில், 496 பேர் தங்க விசா பெற்றுள்ளார்கள். அவர்களில் 94 பேர் ரஷ்யர்கள், 51 பேர் சீனர்கள், 49 பேர் பிரித்தானியர்கள், 38 பேர் அமெரிக்கர்கள்.
இந்த தங்க விசாவுக்கான கட்டணம் மாகாணத்துக்கு மாகாணம் வித்தியாசப்படும். சூரிக்கில்தான் அதிக கட்டணம், ஒரு மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள்!
ஜெனீவாவில் 313,000 ஃப்ராங்குகள், Vaud மாகாணத்தில் 415,000 ஃப்ராங்குகள். மிகவும் குறைந்த கட்டணம், Obwaldenஇல், 250,000 ஃப்ராங்குகள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |