இறுக்கமான பேண்ட் அணிபவர்களுக்கு! அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் என்னென்ன தெரியுமா?
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களை அணிய விரும்புகிறார்கள். இறுக்கமான கால்சட்டை உங்கள் கால்களின் வடிவத்தை அழகாக வெளிப்படுத்த உதவும். ஆனால் அப்படி பேண்ட்களை அணிவது உடல்நலத்தை பல வழிகளில் பாதிக்கும்.
இந்த கூற்றுகளை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்றாலும், இறுக்கமான ஜீன்ஸ் அணிவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆரோக்கியமற்றது என்பதில் சந்தேகமில்லை.
மிகவும் இறுக்கமான பேண்ட்களை அணியும் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை குறையும் அபாயம் அதிகம் உள்ளது.
பேண்ட் இறுக்கமாக அணிவதில் பிரச்சினை என்னவென்றால், அவை காற்றை அனுமதிக்காமல் அந்தரங்க பகுதிகளை சூடாக்குகின்றன. இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மோசமான விளைவை கொடுக்கும்.
இறுக்கமான பேன்ட்கள் ஆண்களின் மர்ம உறுப்புகளுக்கு சேதங்களை ஏற்படுத்தலாம், மேலும் இது புற்றுநோயையும் ஏற்படுத்தக்கூடும்..!
பெண்கள் இறுக்கமான பேண்ட்களை அணிவது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் ஈஸ்ட் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
சில ஆய்வுகள் இறுக்கமான பேன்ட் அணிவது இடுப்பு மூட்டுகளை பாதிக்கும் என்றும் கூறுகின்றன.
எப்படி?
அந்த இறுக்கமானது கால்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம். மேலும் இது முதுகெலும்பையும் மறைமுகமாக பாதிக்கலாம்.