சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை: வானிலை ஆராய்ச்சி மையம்
சுவிட்சர்லாந்தின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை கடுமையான புயல் தாக்க இருப்பதாக சுவிஸ் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இன்று மதியம் 1 மணி முதல் 6 மணிவரை மிக பலத்த புயல் தாக்க இருப்பதாகவும், அது தீவிரத்தன்மையின் அளவில் 4இல் 3ஆவது மட்டத்தில் இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
சனிக்கிழமை துவங்கி ஞாயிற்றுக்கிழமை வரை கன மழையும் இடி மின்னலுடன் கூடிய புயலும் சுவிட்சர்லாந்தை வாட்டி வதைத்த நிலையில், சுமார் 30,000 மின்னல்கள் வரை உருவாகியுள்ளன.
சில பகுதிகள், குறிப்பாக, மத்திய சுவிட்சர்லாந்து மற்றும் டிசினோ ஆகிய பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு, சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Warnung des Bundes: heftige Gewitter möglich. Gefahrenstufe 3 (von 4). Betroffene Regionen, weitere Informationen und Verhaltensempfehlungen auf https://t.co/qjoYMzvqsA oder auf der MeteoSwissApp. #MeteoSchweiz #Unwetterwarnung pic.twitter.com/q90gQtFLtg
— MeteoSchweiz (@meteoschweiz) July 26, 2021
ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. சனிக்கிழமை மாலை, Appenzellஇல், 10 நிமிடங்களில் சுமார் 33.2 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.
சுவிட்சர்லாந்தில், இவ்வளவு குறைவான நேரத்தில் இவ்வளவு அதிக மழை பெய்வது இதுவே முதல் முறையாகும்.
இதற்கிடையில், வாரம் முழுவதும் ஆங்காங்கே மழையும் இடி மின்னலுடன் கூடிய புயலும் தொடரும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Aufgrund von Starkregen und #Hagel wähnte man sich in Appenzell #Ausserrhoden am Nachmittag im tiefsten Winter. https://t.co/l62Rt1WYoq
— SRF News (@srfnews) July 24, 2021
ஆனால், அவை மிகக் கடுமையாக இருக்காது என்கிறார்கள் அவர்கள். அடுத்த சில நாட்களுக்கு வானிலையில் மாற்றங்கள் இருக்கும் என்று கூறும் வானிலை ஆராய்ச்சியாளர்கள், அவ்வப்போது வெயிலும் அடிக்கலாம் என்கிறார்கள். மொத்தத்தில், கடந்த 10 நாட்களில் இருந்தது போல் நிலைமை மிக மோசமாக இருக்காது என்று கூறியுள்ள அவர்கள், கடந்த வாரத்தில் ஏரிகளிலும் ஆறுகளிலும் பெருக்கெடுத்த அதிகரித்த தண்ணீர் மட்டம் கிட்டத்தட்ட அல்லது முற்றிலும் சகஜ நிலைக்கு திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
Der Alpenraum liegt auch heute Montag in einer feuchtwarmen Südwestströmung. Als Folge ist es veränderlich mit einem Mix aus #Wolken, #Sonne und vor allem am Nachmittag #Schauern und stellenweise kräftigen #Gewittern. Prognosen: https://t.co/2lv0pkxXAz (ss) pic.twitter.com/8ehFGl9PAG
— MeteoNews (@MeteoNewsAG) July 26, 2021