பிரான்சைத் தாக்கவிருக்கும் புயல்: வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவை புயல் ஒன்று தாக்கவிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
Storm Ciarán
Storm Ciarán என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், புதன்கிழமை துவங்கி வியாழன் வரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Photograph: Fred Tanneau/AFP/Getty
மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்றும், பிரான்சின் மேற்குக்கரையில் மணிக்கு 80 மைலுக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசலாம் என்றும், இந்த வாரம் முழுவதுமே காற்று வீசியவண்ணமே இருக்கும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
LBC
கனமழையும் பெய்யக்கூடும் என்றும், மேற்கு பிரான்ஸ் பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் பிரான்சின் மீதமுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |