ஆந்திராவை நோக்கி நகரும் புயல் சின்னம்.., தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை?
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில் நிலவுகிறது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழக - தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிக்கு அருகில் நிலவக்கூடும் என்று வானிலை மையம் கூறியள்ளது.
இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |