7 முறை தோல்வி - 8 வது முயற்சியில் UPSC தேர்வில் சாதித்த நெசவாளியின் மகன்
நெசவாளியின் மகனான சபரீஸ்வரன் தனது 8 வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
2025 ஆம் ஆண்டுக்கான UPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 6 ஆம் திகதி வெளியானதில், நாடு முழுவதும் 958 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில், தமிழ்நாட்டை சேர்ந்த 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
8 வது முயற்சியில் வென்ற சபரீஸ்வரன்
நாமக்கல் மாவட்டம் காலிப்பட்டியை சேர்ந்த சபரீஸ்வரன் என்ற இளைஞர், இந்த முறை அகில இந்திய அளவில் 700வது இடம் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவரது தந்தை விசைத்தறி நெசவாளராக பணியாற்றி குடும்பத்தை ஆதரித்து வந்துள்ளார். அவரின் தாய் இல்லத்தரசி ஆவார்.
2017 ஆம் ஆண்டில் பார்மஸி படிப்பை முடித்த அவர் அப்போது முதலே UPSC தேர்வுக்கு தயாராக தொடங்கியுள்ளார்.
2017 ஆம் ஆண்டில் அவரது UPSC ஆர்வம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்த போது, அவர்கள் தேர்வுக்கு தயாராக ஊக்கப்படுத்தியுள்ளனர்.
ஆரம்பத்தில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்ட அவர் ஒவ்வொரு முறை தோல்வியின் போதும், அதில் உள்ள தவறை ஆராய்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டுள்ளார்.
6 முறை அவர் முதல்நிலை தேர்ச்சி பெற்றாலும், அவரால் முதன்மை தேர்விற்கு செல்ல முடியவில்லை. கடந்த முறை முதன்மை தேர்விலும் தேர்ச்சி பெற்று, நேர்காணலுக்கு சென்று 2 மதிப்பெண்களில் வெற்றியை தவற விட்டார்.
தோல்வியடைந்தாலும் மனம் தளர வேண்டாம் அடுத்த முறை உனது வெற்றியை கொண்டாடுவோம் என அவரது பெற்றோர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்துள்ளனர்.
7 முறை அவர் முயற்சி செய்து தோல்வியடைந்த நிலையிலும் மனம் தளராமல் முயற்சித்து, தனது 8வது முயற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
நான் முதல்வன் திட்டம் அவரது 6வது முயற்சி வரை ஓரளவிற்கு ஆதரவு கிடைத்துள்ளது. அதன் பின்னர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளார்.
இதில், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு 7,000 ரூபாயும், முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு 25,000 ரூபாயும், நேர்காணலில் தேர்ச்சி பெற்றதற்கு 50,000 ரூபாயும் ஊக்கத்தொகையாக தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |