செல்போன் தொலைந்துவிட்டதா? கண்டுபிடிக்க புதிய இணையத்தளம் அறிமுகம்
தொலைந்து போன அல்லது திருட்டுப்போன செல்போன்களை கண்டறிய ஒரு புதிய இணையதளமொன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ceir.sancharseathi.gov.in என்ற இணையத்தளத்தில் புகார் அளித்தால், மத்திய சாதன அடையாள பதிவின் மூலமாக IMEI எண்ணை பயன்படுத்தி தொலைந்த செல்போனை 24 மணி நேரத்தில் கண்டறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அந்த செல்போனில் வேறு யாரேனும் சிம்கார்டு போட்டு உபயோகித்தாலும் அது குறித்த தகவல் மற்றும் Live Location சைபர் கிரைம் போலீஸாருக்கு தெரிந்துவிடும்.
இதன்மூலம் செல்போன் வைத்திருப்பவரின் இருப்பிடம் அறிந்து போலீஸாரால் நடவடிக்கை எடுக்க முடியும்.
இதையடுத்து மீட்கப்படும் செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க இது உதவியாக இருக்கும் என தமிழக சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் யார் பெயரில் எத்தனை செல்போன்கள், சிம்கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறித்தும் இந்த இணையதளம் மூலம் அறியலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |