திருமணம் முடிந்த 2 மணி நேரத்தில் கிடைத்த Wedding ஆல்பம்.., AI Technology -யின் அசுர வளர்ச்சி
திருமணம் முடிந்த இரண்டு மணி நேரத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் மூலம் திருமண புகைப்பட ஆல்பம் மணமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஏ.ஐ பயன்படுத்தி புகைப்படம்
தற்போதைய காலத்தில் தொழிநுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) தொழில்நுட்பம் வந்ததில் இருந்து மனிதர்களுக்கு வேலை குறைந்துள்ளது என்றே சொல்லலாம்.
ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்களை QR Code மூலம் ஸ்கேன் செய்தால் உடனடியாக டவுன்லோடு செய்ய முடியும்.
அந்தவகையில், சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மோகனசுந்தரம் மற்றும் பிரீத்தி ஆகிய இருவருக்கு நடைபெற்ற திருமணத்தில் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தனர். அப்போது, கார்னிவல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தது.
திருமண ஆல்பம்
இதில், திருமணம் முடிந்த 2 மணி நேரத்திலேயே திருமண புகைப்பட ஆல்பம் மணமக்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இதனால், புதுமண தம்பதியினர் மற்றும் உறவினர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து புதுமணத்தம்பதியினர் கூறுகையில், "திருமணம் முடிந்தவுடன் ஆல்பம் கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. தாலி காட்டும் நேரத்தில் எனது முகம் எப்படி இருந்தது என மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தற்போது அதனை பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |