திருமண விழாவில் இருந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி: சடலமாக பலர்
அவுஸ்திரேலியாவில் திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டு பேருந்தில் வீடு திரும்பிய குழு ஒன்று விபத்தில் சிக்கியதில் 10 பேர் சம்பவயிடத்திலேயே கொல்லப்பட்ட தகவல் நொறுங்க வைத்துள்ளது.
20க்கும் மேற்பட்டவர்கள்
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
Credit: 9news
ஞாயிறன்று இரவு நடந்த இந்த கோர சம்பவத்திற்கு பின்னர், 58 வயதான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மீது இன்னும் வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவயிடத்தில் திரண்டுள்ள பொலிசார், விபத்தில் சிக்கிய பேருந்துக்குள் மேலும் மக்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், முதற்கட்ட ஆய்வுக்கு பின்னர், 10 பேர் சம்பவயிடத்தில் மரணமடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் 25 பேர் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, விபத்துக்கு பின்னர் பலர் காயங்களுடன் தாமாகவே உதவி கேட்டு வெளியேறியதாகவும் கூறுகின்றனர். தற்போது விபத்தில் சிக்கிய அந்த பேருந்து பயணிகள் அனைவரையும் அடையாளம் காணும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Credit: 9news
நான்கு மருத்துவமனைகளில் சிகிச்சை
இதனிடையே, திங்கட்கிழமை பகல் மாகாண முதல்வர் Chris Minns தெரிவிக்கையில், தொடர்புடைய பேருந்து விபத்தில் சிக்கிய 21 பேர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, நான்கு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர் என்றார்.
அதில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் உள்ளார் எனவும், எஞ்சியவர்கள் அச்சப்படும் நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடங்கிய நாள் இன்று பலருக்கும் மிக மோசமாக நிறைவடைந்துள்ளது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Credit: 9news
இதனிடையே பொலிசார் தெரிவிக்கையில், சாரதியின் கவனக்குறைவு காரணமாக விபத்து நேர்ந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது. இருப்பினும், சாரதியிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் என்ன நடந்தது என்பது முடிவுக்கு வரமுடியும் என தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி 11.30 மணியளவில் Greta பகுதிக்கு அருகாமையில் இருந்து விபத்து தொடர்பில் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்படுவதற்கு முன்னர் கட்டாய பரிசோதனை மற்றும் ஆய்விற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.