திருமண ஊர்வல DJ சத்தத்தால் உயிரிழந்த 140 கோழிகள்
திருமண DJ சத்தத்தால் 140 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
DJ சத்தத்தால் உயிரிழந்த 140 கோழிகள்
உத்தரப் பிரதேச மாநிலம், சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள தரியாபூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி அந்த பகுதியை சேர்ந்த பப்பன் விஸ்வகர்மாவின் மகளின் திருமணம் ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

அதே பகுதியில் உள்ள சாபிர் அலி என்பவர் நடத்தி வரும் கோழிப் பண்ணையை , இரவு சுமார் 9:30 மணியளவில் தாண்டி ஊர்வலம் கடந்து சென்றுள்ளது.
திருமண ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்ட DJ சத்தம் அதிகளவில் இருந்ததால், தனது பண்ணையில் உள்ள 140 கோழிகள் உயிரிழந்து விட்டதாக சாபிர் அலி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், சம்மந்தப்பட்ட டிஜே ஆபரேட்டரான கவி யாதவ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவை விட அதிக சத்தத்தில் ஒலி எழுப்பப்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதிக செறிவுள்ள ஒலி அலைகள், பறவைகளிலும் விலங்குகளிலும் கடுமையான மன அழுத்த எதிர்வினைகளைத் தூண்டி, சில சமயங்களில் மாரடைப்பில் முடியக்கூடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |