கோலாகலமாக நடந்த செல்ல நாய்களின் திருமணம்! ஹரியானாவில் நடைபெற்ற சுவராஸ்ய சம்பவம்
ஹரியானா மாநிலம் குருகிராமில் வழக்கத்திற்கு மாறாக இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குருகிராமில் உள்ள பாலம் விஹார் பகுதியில் ராணி என்ற நபர்தனது செல்ல நாய்களுக்கு மனிதர்களுக்கு செய்வது போலவே சுமார் 100 அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு சுற்றத்தாரை அழைத்தும், ஆன்லைன் மூலமாகத் தொடர்பு கொண்டு திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த நாய்கள் திருமணம் ஹரியானா மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்துள்ளது.
மண நாள் அன்று பெண் நாய்க்கு புடவை அணிவிக்கப்பட்டதுடன் மெகந்தியும் வைக்கப்பட்டு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
பூஜை, புனஸ்காரத்துடன் அச்சு அசலாக நிஜ கல்யாணம் போலவே நடந்தேறிய இத்திருமண நிகழ்வு பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.