காலையில் திருமணம் செய்த காதல் தம்பதியினர்., மாலையில் மணப்பெண் மரணம்
காலையில் திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் மாலையில் ஒருவொருக்கொருவர் கத்தியால் குத்தியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
இந்திய மாநிலமான கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் உள்ள கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த லிகிதா ஸ்ரீ (20) என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் நேற்று காலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
மணப்பெண் மரணம்
இதையடுத்து, மதியம் புதுமணத்தம்பதிகளை தனியாக ஒரு அறையில் வைத்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவரும் ஒருவருக்கொருவர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். பின்னர், இருவர்களையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால், அதற்குள் மணப்பெண் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதனால், நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |