இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா?

UK Prince William Princess Kate wedding day
By Balamanuvelan Apr 29, 2021 10:40 AM GMT
Report

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேட்டின் பத்தாவது ஆண்டு திருமண நாள் விழா... இளவரசர் வில்லியம் கேட் ஜோடியைப் பார்க்கும்போது, பெரும்பாலும் இருவரும் சிரித்தவண்ணம் இருக்கும் புகைப்படங்களைத்தான் அதிகம் காணமுடியும், குறிப்பாக, கேட்டின் அந்த பெரிய புன்னகை வசீகரிக்கும். ஆனால், அந்த ஜோடி ஒன்றும் அவ்வளவு சீக்கிரம் இணைந்துவிடவில்லை.

வில்லியம் வாழ்வில் பல பெண்கள் வந்து சென்றார்கள். அவர்களில் ஒருவராக வந்த கேட்டும், பத்தோடு பதினொன்றாகியிருப்பதற்கான சூழல்கள் கூட உருவானது.

வில்லியமும் கேட்டும் பழக ஆரம்பித்த காலகட்டத்தில், அவ்வளவு உரசல்கள் இருந்தன இருவருக்கும் இடையில்... வில்லியமும் கேட்டும் St.Andrews கல்லூரியில்தான் முதன்முதலில் சந்தித்துக்கொண்டார்கள்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

ஆனால், அவர்களுடையது ஒன்றும் கண்டதும் காதல் அல்ல! கல்லூரிப்பருவத்தின் பெரும்பகுதியில் வில்லியமுடன் இன்னொரு பெண் கூடவே இருந்தார். Carley Massy-Birch என்ற ஆங்கிலம் பயின்ற மாணவி அவர்.

Carleyயும் வில்லியமும் சேர்ந்து சுற்ற, ஆனால், வில்லியமுடைய முன்னாள் காதலி ஒருவருடன் அவர் இன்னும் தொடர்பு வைத்திருப்பதை அறிந்த Carley, வில்லியமை பிரிந்துவிட்டார்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

அந்த முன்னாள் காதலி Arabella Musgrave! Arabellaவும் வில்லியமும் சிறுவயது முதல் நண்பர்கள். வில்லியம் கல்லூரியில் சேருவது வரை இருவரும் டேட்டிங் செய்திருக்கிறார்கள்.

ஆனால், வில்லியம் தன்னை விட்டு அவ்வளவு தூரம் கல்லூரிக்கு செல்வது பிடிக்காததால் Arabella பிரேக் அப் கூறிவிட்டார்.

இந்நிலையில்தான், ஒருநாள், உள்ளாடைகள் பளிச்சென தெரியும் வகையில் மெல்லிய கருப்பு நிற உடை அணிந்து கேட், catwalk செய்ய, அப்போதுதான் கேட்டின் அழகில் மயங்கியிருக்கிறார் வில்லியம். அப்புறம் வில்லியம் கேட்டைப் பின் தொடர, ஒரு நாள் இருவரும் மணிக்கணக்காக அமர்ந்து பேசியிருக்கிறார்கள்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

அப்போது வில்லியம் கேட்டை முத்தமிட முயல, சட்டென விலகியிருக்கிறார் கேட்! காரணம், அப்போது கேட்டும் Rupert Finch என்ற மாணவருடன் டேட்டிங் செய்துகொண்டிருந்திருக்கிறார்.

போகப்போக, வில்லியமுக்கும் தனக்கும் இருக்கும் ஈர்ப்பு Rupertஉடன் இருக்கும் ஈர்ப்பை விட ஆழமானது என்பதை கேட் உணர்ந்துகொள்ள, Rupertஐப் பிரிந்து வில்லியமும் கேட்டும் ஒரு வீட்டில் தங்கத் துவங்கியிருக்கிறார்கள்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

ஆனாலும், தனது 21ஆவது பிறந்தநாளின்போது ஊடகவியலாளர்கள் முன் பேசிய வில்லியம், இன்னும் தன் வாழ்வில் ஒரு பெண் வரவில்லை என்று கூறியிருக்கிறார். இருவருக்குமான உறவு வலுப்படும் முன், Jecca Craig என்ற பெண் வில்லியம் வாழ்வில் நுழைந்திருக்கிறார். அந்த காலகட்டத்தில், வில்லியமுக்கும் Jeccaவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூட ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.

அப்புறம், ராஜ குடும்பத்தினர் தாமாக முன்வந்து அப்படி ஒன்றும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவிக்க, அவர்கள் இருவரும் பிரிந்திருக்கிறார்கள். ஏப்ரல் 2004ஆம் ஆண்டு முதன்முறையாக வில்லியம் கேட் காதல் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாகியுள்ளது.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

ஆனால், அதற்குப்பின்பும் இருவருக்கும் இடையே உரசல்கள், கேட் முன்னிலையிலேயே வேறு பெண்களிடம் வழிந்திருக்கிறார் வில்லியம். பல்வேறு வதந்திகள் வலம் வரத் தொடங்கியுள்ளன.

Anna Sloan என்ற பெண்ணுடன் விடுமுறையைக் கழிக்க வில்லியம் சென்று விட, கேட் ஆத்திரத்தில் மனம் புழுங்கியிருக்கிறார். கேட் இன்னும் ஆழமாக வில்லியமை காதலித்துக்கொண்டிருக்க, அவரோ Isabella Anstruther என்ற மற்றொரு பெண்ணுடன் சுற்ற, வில்லியம் இனி Isabellaவைப் பார்கக்கூடாது என தடை போட்டிருக்கிறார் கேட்.

அது வில்லியமுக்கு பிடிக்கவில்லை, எனவே கேட்டும் வில்லியமும் பிரிவதென முடிவு செய்திருக்கிறார்கள். வில்லியம் மீண்டும் Jeccaவைப் பார்க்க கென்யாவுக்கு சென்றுவிட்டார்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate  

அடுத்து கேட் எடுத்த ஒரு முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. வில்லியம், அவரது தந்தை சார்லஸ், மற்றும் தம்பி ஹரியுடன் விடுமுறையைக் கழிக்கச் சென்றதுதான் அவர் எடுத்த மிகச் சரியான முடிவு.

அவர் எதிர்பார்த்ததுபோலவே, அவர் எடுத்த முடிவு நல்ல பலனைக் கொடுத்துள்ளது. அதற்குப் பின், பல ராஜ குடும்ப நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார் கேட்.

ஆனாலும், மீண்டும் Tess Shepherd என்ற பெண், பிறகு இன்னொரு பெண் என வெவ்வேறு பெண்களுடன் வில்லியம் சுற்றத் தொடங்க, 2007ஆம் ஆண்டு, பத்திரிகைகள் கேட்டுக்கு, எப்போதும் காத்திருக்கும் பெண் கேட் (Waitey Katie) என பட்டப்பெயரிட்டு அழைத்ததுடன், ஒன்றில் என்னை திருமணம் செய், அல்லது என்னை விட்டு விடு என கேட் வில்லியமுக்கு கெடு விதித்திருக்கிறார் என செய்திகள் வெளியிட, கேட் மனம் நொந்துபோயிருக்கிறார்.

அந்த ஈஸ்டரில் கேட்டும் வில்லியமும் பிரிந்துவிட்டார்கள். வில்லியம் வெவ்வேறு பெண்களுடன் சுற்றிக்கொண்டிருக்க, கேட் அவரை தண்டிக்கும் வகையில் தனியாக போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கத் துவங்கியுள்ளார்.

கடைசியாக 2010ஆம் ஆண்டு ஒருவழியாக, தாங்கள் நிச்சயம் செய்ய இருப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் வில்லியமும் கேட்டும் அறிவிக்க, மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

திருமணம் முடிந்த ஒரு ஆண்டு வாழ்க்கை நன்றாக போயிருக்கிறது. ஆனால், 2017ஆம் ஆண்டு, வேறொரு பெண்ணுடன் மோசமான வகையில் வீடியோ ஒன்றில் சிக்கியிருக்கிறார் வில்லியம்.

கேட்டுக்கு வில்லியம் துரோகம் செய்துவிட்டார் என செய்திகள் வெளியாக, பிறகு அவை வதந்திகள் என மறுக்கப்பட, நீண்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு, இனி ஒழுங்காக திருமண வாழ்வை தொடர்வது என முடிவு செய்துள்ளனர் தம்பதியர்.

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

அதற்குப் பிறகு பத்து ஆண்டுகள் திருமண வாழ்வை எதிர்கொண்ட நிலையில், இப்போது இருவருக்குமான உறவு உறுதியாக உள்ளது.

வாழ்வில் பல பள்ளம் மேடுகளை சந்தித்தாலும், இப்போது இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசிப்பதாகவும், அவர்களது கவனம் முழுவதும் அவர்களுடைய பிள்ளைகள் மீதே இருப்பதாகவும் தெரிவிக்கிறார் அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர். 

இன்று பிரித்தானிய இளவரசர் வில்லியம் இளவரசி கேட்டின் திருமண நினைவு நாள்... ஆனால் கேட்டுக்கு முன் வில்லியம் வாழ்வில் எத்தனை பெண்கள் இருந்தார்கள் தெரியுமா? | Wedding Memorial Day Of Prince William Kate

மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US