எப்ஸ்டீன் தொடர்பு: மற்றொரு பிரபலம் ராஜினாமா
மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்தது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எப்ஸ்டீன் தொடர்பு
அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து இளம்பெண்கள் ஏராளமானோரை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பிலான ஆவணங்களை எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியிட்டுவருகிறது.

எப்ஸ்டீனுடன் தொடர்பு இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து பல நாடுகளிலுள்ள பிரபலங்கள் ஒன்றில் பதவி நீக்கம் செய்யப்பட்டு வருகிறார்கள் அல்லது ராஜினாமா செய்துவருகிறார்கள்.
அவ்வகையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் உலக பொருளாதார மன்றத்தின் தலைவரான Borge Brende என்பவரும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் Borge Brendeயின் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அது தொடர்பில் அவர் மீது விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
நோர்வே நாட்டவரான Borge Brende, அந்நாட்டில் பல்வேறு முக்கிய பதவிகள் வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |