ஒரே மாதத்தில் எடையை குறைக்கனுமா? இந்த விதையை தினமும் இப்படி சாப்பிடுங்க போதும்
பொதுவாக சியா விதைகள் இன்றி ஒரு கோடைகாலம் இருக்க முடியாது.
குறிப்பாக சாதாரணமாக சாலையோரங்களில் உள்ள ஜூஸ் கடைகளில் கூட நாம் பருகும் குளிர்பானங்களில் சியா விதைகளை கலந்து தருவார்கள்.
இது மட்டுமல்லாமல் சாலட் தயாரிக்கும்போது சியா விதைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
இது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது.
அதிலும் இது உடல் எடையினை குறைக்க பெரிதுமே உதவுகின்றது.
அந்தவகையில் இதனை எடையை குறைக்க எப்படி எல்லாம் எடுத்து கொள்ளலாம் என்று பார்ப்போம்.
சியா விதைகள் எப்படி உதவுகின்றன?
சியா விதைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்க உதவுகிறது. இதன் விளைவாக உடல் எடையைக் குறைக்க உதவுகின்றது.
சியா விதைகளை உட்கொண்டு வந்தால், அது வயிற்றுப் பகுதியில் உள்ள உள்ளுறுப்பு கொழுப்புக்ளை குறைக்கின்றது.
சியா விதைகளை எப்படியெல்லம் சாப்பிடலாம் ?
- ஒரு பௌலில் பால், தயிர், சியா விதைகள், மாப்பிள் சிரப் மற்றும் சிறிது உப்பு ஆகியவற்றை எடுத்துக் அனைத்தையும் ஒன்றாக கலந்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு அதை மூடி வைத்து, ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து, மறுநாள் காலையில் எடுத்தால், சியா புட்டிங் தயார். விருப்பமிருந்தால், அதன் மேல் சிறிது விருப்பமான பழங்களைத் தூவி சாப்பிடலாம்.
- முதலில் தேங்காய் பாலில், சிறிது சியா விதைகளைப் போட்டு, தேன் சேர்த்து கலந்து, 2 மணிநேரம் ஊற வைத்து பின் உங்களுக்கு விருப்பமான பழங்களை துண்டுகளாக்கி ஒரு பௌலில் எடுத்து கொள்ள வேண்டும். பின்பு அதில் சிறிது நட்ஸை பொடியாக வெட்டி, பழங்களுடன் சேர்த்து கிளற வேண்டும்.
பிறகு அதில் சியா விதை கலவை சேர்த்து நன்கு கலந்து சாப்பிடலாம்.
- ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், சியா விதைகள், பட்டைத் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து பின் அதில் பாதாம் பாலை சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வேக வைக வைக்கவும். ஓட்ஸ் நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும். அடுத்து அதில் சுவைக்கேற்ப தேன் மற்றும் விருப்பமான பழங்கள் மற்றும் நட்ஸ்களை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
- சியா விதைகளை எடுத்து, அதில் நீரை ஊற்றி பின் அதில் புதினா இலைகள், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 30 நிமிடம் ஆனதும், அதை நன்கு கலந்து குடிக்கவும்.