உடல் எடையை குறைக்கனுமா? அப்போ இந்த சட்னி செய்து சாப்பிடுங்க
Garlic
Onion
Healthy Food Recipes
By Kirthiga
பொதுவாகவே பலருக்கும் தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும்.
உடல் எடை இருந்தால் தனது தோற்றத்தை அழகற்றதாக காட்டும் என நம்பியிருக்கின்றார்கள்.
அதற்கு பல முறையில் பல விடயங்களை முயற்சித்து பார்த்து தனது உடல் எடையை குறைத்துக்கொள்ள நினைத்து இருப்பார்கள்.
அதற்கு எல்லாம் முற்று புள்ளி வைக்கும் முகமாக இருப்பது தான் இந்த கொள்ளு சட்னி. இதை ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க போதும்.
இதை செய்வது எப்படி மற்றும் இதனால் உடலில் ஏற்படக்கூடய நன்மைகள் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு – 50 கிராம்
- சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
-
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
-
பூண்டு – 04 பற்கள்
- வரமிளகாய் – 05
- சின்ன வெங்காயம் – 10
- புளி – சிறு நெல்லிக்காய் அளவு
-
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
- தேங்காய் துருவல் – கால் கப்
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
-
சமையல் எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- கடுகு – அரை டீஸ்பூன்
- கருவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை
-
முதலில் ஒரு பாத்திரத்தில் கொள்ளு சேர்த்து வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
- பின் அதே பாத்திரத்தில் எண்ணெய், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொண்ணிறமாக வறுத்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
- அதனுடன் பூண்டு, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.
- புளி,தேங்காய் துருவல், பெருங்காய தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வதக்கி வந்ததும் மற்றும் வறுத்தெடுத்ததையும் மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இறுதியாக எண்ணெய், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் கலந்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான கொள்ளு சட்னி தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US