உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க உதவும் லட்டு.., எப்படி செய்வது?
தற்போது பெரும்பாலோருக்கும் உடல் எடை அதிகரிப்பு பிரச்சனை இருக்கிறது.
அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கொள்ளு- 1 கப்
- கருப்பு உளுந்து- ½ கப்
- வேர்க்கடலை- 4 ஸ்பூன்
- எள்ளு- 2 ஸ்பூன்
- வெல்லம்- 3
- ஏலக்காய்- 2
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் கொள்ளை கடாயில் போட்டு நன்றாக வாசம் வரும் வரை சிவக்க வறுத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின் அதே கடாயில் கருப்பு உளுந்தை போட்டு வறுத்து எடுத்து, அடுத்து வேர்க்கடலை, எள், ஏலக்காயை வறுத்துக் கொள்ளுங்கள்.
அனைத்துப் பொருட்களையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்து வைத்த பொடியுடன், நன்றாக பொடி செய்யப்பட்ட வெல்லத்தை போட்டு, நெய் ஊற்றி நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
பின் இதனை சிறிய சிறிய உருண்டையாக உருட்டி லட்டு பிடித்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |