Oats Cookies: உடல் எடையை குறைக்கும் ஓட்ஸ் குக்கீஸ் செய்வது எப்படி?
Weight Loss
Healthy Food Recipes
By Kirthiga
உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் உடனே அனைவரு்கும் ஞாபகத்திற்கு வருவது ஓட்ஸ் தான்.
இந்த ஓட்ஸானது பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த மற்றும் மலிவான விலையில் கிடைக்கக் கூடிய ஒரு பொருளாகும்.
பச்சையாக அல்லது சமைத்து சாப்பிட்டாலும் ஓட்ஸ் ஒரு சிறந்த எடை இழப்பு உணவாக இருக்கும்.
உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் எப்போதும் அவர்கள் விரும்பும் உணவை எடுத்துக்கொள்வது கடினம்.
ஆனால் இந்த ஓட்ஸ் வைத்து செய்யும் எந்த ஒரு உணவும் உடல் எடையை அதிகரிக்காது. எனவே இந்த ஓட்ஸ் வைத்து எப்படி சுவையான ஓட்ஸ் குக்கீஸ் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரோல்டு ஓட்ஸ் - 1 கப்
-
இன்ஸ்டன்ட் ஓட்ஸ் - 2 கப்
- உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப்
- சர்க்கரை - 1 கப்
-
நாட்டு சர்க்கரை - 1 கப்
- பால் - 1/2 கப் காய்ச்சி ஆறவைத்தது
-
கோகோ பவுடர் - 1/4 கப்
-
க்ரன்ச் பினட் பட்டர் - 1/2 கப்
-
வெண்ணிலா எசென்ஸ் - 2 தேக்கரண்டி
- உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
- பாத்திரத்தில் உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சர்க்கரை, நாட்டு சர்க்கரை, பால் சேர்த்து கலந்துவிடவும்.
- பின்பு கோகோ பவுடர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
- பிறகு க்ரன்ச் பினட் பட்டர், வெண்ணிலா எசென்ஸ் மட்டும் உப்பு சேர்த்து கலக்கவும்.
- பின்பு ரோல்டு ஓட்ஸ், இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து கலந்துவிடவும்.
- கேக் அச்சில் வெண்ணெய் தடவி பட்டர் பேப்பரை வைத்து அதன் மேல் தயார் செய்த ஓட்ஸ் கலவையை வட்டமாக தட்டி 1 மணிநேரம் வைத்து எடுத்தால் ஓட்ஸ் குக்கீஸ் தயார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US