பெண்களே உஷார்... உடல் பருமனை குறைக்க மாத்திரை எடுத்துக் கொள்பவரா நீங்கள்?
தற்போதைய சமூகத்தினர் உடல் எடை அதிகரிப்பால் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிகமாக உடலை அசைக்காமல் இருப்பதாலும் ஒரு சிலருக்கு எடை அதிகரிக்கும்.
தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் கட்டாயம் எடையை குறைத்திடலாம். சீரான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பதும் உடல் எடையை குறைப்பதற்கான பிரதான வழிமுறை ஆகும்.
இவ்வாறு செய்வதனால் ஒரு நல்ல பலனை பெற முடியவில்லை என நினைப்பவர்கள் உடனே கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.
மாத்திரைகளின் மூலமாக எளிமையான முறையில் எடையை குறைத்திடலாம் என எண்ணியே இதை நாடி செல்கின்றனர். ஆனால் இதனால் ஆரம்பத்தில் நன்மை கிடைத்தாலும் காலப்போக்கில் அதுவே பிரச்சினையாக மாறிவிடும்.
எனவே அது பற்றி விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உடற் பருமனை குறைக்கும் மாத்திரை
விற்பனைக்கு வருகின்ற உடல் எடை குறைப்பு மாத்திரைகள் அனைத்தும் மோசமான பலனை தரக்கூடிய மாத்திரைகளாகும்.
மாத்திரை உற்பத்தி மாபெரும் அளவில் கட்டுப்பாடின்றி விற்பனையாக வருகிறது. விற்பனையாகும் அனைத்து மாத்திரைகளும் பரிசோதனை செய்யப்பட்டு, போதுமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வருவதில்லை. எனவே இதை எல்லாம் சரிவர பார்த்தே உட்கொள்ள வேண்டாம்.
பக்கவிளைவுகள்
- செரிமானக் கோளாறு
- இதய படபடப்பு
- இரத்த அழுத்தம்
- இதயநலக் கோளாறுகள்
- குமட்டல்
- வயிற்றுப்போக்கு
- வயிற்றுவலி
- மன அழுத்தம்
- தூக்கமின்மை
- கல்லீரலின் செயற்பாடு பாதிக்கும்
மாத்திரைகளால் உடல் எடையை குறைப்பது குறுகிய கால பலனை கொடுத்தாலும், அதை கை விடும்போது மீண்டும் உடல் எடை அதிகரிக்கும். எனவே மருத்து ஆலோசனையுடன் இதை கடைப்பிடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |