101 கிலோ இருந்த சிம்பு.. இதுவரை எவ்வளவு எடை குறைத்துள்ளார் தெரியுமா? ஆச்சரியபட வைக்கும் தகவல்
சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படத்திற்காக நடிகர் சிம்பு மாறியுள்ள தோற்றம் ரசிகர்களிடம் ஆச்சர்த்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களில் சிம்பு வெயிட் போட்டு 101 கிலோவாக இருந்தார். அவரின் உடல் வாகை பார்த்து சிலர் கிண்டல் செய்யாதவர்களே இல்லை.
பிறகு இவரது கடின உழைப்பால் தற்போது உடல் எடையை குறைத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து வியக்காதவர்களே இல்லை என்று கூறலாம்.
சிம்புவின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்னவென்று அவரின் நண்பர் மகத் மற்றும் ட்ரெய்னர் சந்தீப் தெரிவித்துள்ளனர். இதை பிரபல தமிழ் ஊடகமான சமயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தது.
அதில், 'கடந்த நவம்பர் மாதம் தான் சிம்புவின் ஒர்க்அவுட் செஷன் துவங்கினார். அப்பொழுது 101 கிலோவாக இருந்தார்.
காலை 4.30 மணிக்கு எழுந்து நடைபயிற்சி செய்வார். அதன் பிறகு ஜிம்மிற்கு வந்து ஒர்க்அவுட் செய்வார். முதலில் வாரத்திற்கு 4 நாட்களில் ஆரம்பித்து 5 நாட்களாக மாற்றி ஒர்க்அவுட் செய்தார்.
பிப்ரவரி மாதம் சிம்புவின் எடை 87 கிலோவானது. கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டு வீட்டில் முடங்கிய பிறகு சிம்புவுக்கு மீண்டும் வெயிட் போட ஆரம்பித்தது. ஜூன் மாதம் தான் மீண்டும் ஒர்க்அவுட்டை துவங்கினோம். அவரின் எடை 71.1 கிலோ குறைந்தது.
சிம்பு ஜங்க் ஃபுட் மற்றும் அசைவம் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்திவிட்டார். அவரே சமைத்து சாப்பிட ஆரம்பித்தார்.
சிம்பு படத்திற்காகவோ, மற்றவர்களுக்கு நிரூபிக்கவோ தன் உடல் எடையை குறைக்கவில்லை. தான் கஷ்டப்பட்டபோது தனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக எடையை குறைக்க விரும்பினார் என்று" சந்தீப் கூறியுள்ளார்.
மேலும் மகத் சிம்பு பற்றி கூறியதாவது, சிம்புவுக்கு Sports என்றால் மிகவும் பிடிக்கும். ஒர்க்அவுட் செய்வது தவிர்த்து அவர் டென்னிஸ், பாக்ஸிங் செய்வது, நீச்சல் அடிப்பது, கூடைப்பந்தும் ஆடுகிறார்.
பாக்ஸர் சுதர்ஷன் அண்ணாதுரை சிம்புவுக்கு பயிற்சி அளித்தார். சிம்புவின் தீவிர ரசிகனான சரவணன் அவருக்கு டென்னிஸ் ஆட பயிற்சி அளித்தார். சிம்புவை நினைத்து பெருமையாக உள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் நேற்று சிம்பு ஒரு புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தற்போது மேலும் 15 கிலோ எடை குறைத்துள்ளாராம். இது வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்காக குறைத்துள்ளாராம். இதன் மூலம் சிம்பு இதுவரை 45 கிலோ எடை குறைத்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது.
#Atman #SilambarasanTR #VendhuThanindhathuKaadu pic.twitter.com/NoJ9VjEGKs
— Silambarasan TR (@SilambarasanTR_) August 13, 2021