உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ காலையில் இத மட்டும் செய்யுங்க
இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கம் இருக்கும் ஒரே பிரச்சினை உடல் எடை குறைப்பு. உடல் எடை அதிகமாகுவதால் பலவிதமான பிரச்சினைகள் வந்து சேரும். மூட்டு வலி, சோர்வு, இரத்த ரத்தம் போன்ற நோய்களும் உண்டாகும். உடல் எடையை குறைக்க முடியாமல் பலர் அவதிப்பட்டு வருகின்றனர்.
கவலை வேண்டாம். தினமும் காலையில் இதை மட்டும் செய்தீங்கள் என்றால், உடல் எடையை சுலபமாக குறைத்து விடலாம்.
டிப்ஸ் 1
உடல் எடையை குறைக்க நினைத்தால், முதலில் நீங்கள் அதிகாலையில் எழ வேண்டும். இரவில் சீக்கிரம் உறங்கச் சென்று, போதுமான அளவு தூங்கி, காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்.
டிப்ஸ் 2
சீக்கிரம் எழுந்த பிறகு, காலையில் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். இப்படி சூரிய ஒளியில் நிற்பதால் உங்களுக்கு வைட்டமின் டி கிடைக்கும். இதனால், உங்கள் எலும்புகள் வலிமை அடைவதோடு, உடல் எடையும் குறைக்க உதவி செய்யும்.
டிப்ஸ் 3
சூரிய ஒளி வாங்கிய பிறகு, உடற்பயிற்சி செய்ய வேண்டும். மிதமான உடற்பயிற்சி உங்கள் எடையை குறைக்க உதவி செய்யும். மேலும், உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும்.
டிப்ஸ் 4
உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உங்களுடைய மன அழுதத்தை தூக்கி எறிய வேண்டும். மன அழுத்தம் ஏற்பட்டதால் உடலில் கார்டிசோல் வெளிப்படும். இது உங்கள் உடல் எடையை அதிகரிக்க தூண்டும். எப்போதும் நீங்கள் மன அழுத்தம் இல்லாமல் இருந்தாலே சுலபமாக உடல் எடையை குறைத்து விடலாம்.
டிப்ஸ் 5
உடல் எடையை குறைக்க நினைத்தால், முதலில் அடிக்கடி உணவு உண்ணும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். காலை உணவை தவிர்க்க கூடாது. காலையில் புரதச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய பசியை குறைக்கும்.