7 நாளில் 4 கிலோ உடல் எடை குறைக்கலாம்... எப்படின்னு தெரியுமா? இதோ
இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
பீட்சா, பர்கர் என்று பலதரப்பட்ட கொழுப்பு வகையான உணவுகளை சாப்பிடுவதால் சிலருக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க முடியாமல் இன்றைய கால சமூகத்தினர் பெரும் பாடுபடுகின்றனர். கவலை வேண்டாம்....
வெறும் 7 நாட்களில் 4 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம். எப்படி என்று இப்போ பார்க்கலாம் வாங்க...
முதல் நாள்
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முதல் நாளில் பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும். வாழைப்பழத்தை மட்டும் தவிர்த்துவிட வேண்டும். வாழைப்பழம் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள். அன்று நாள் முழுவதும் நீங்கள் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரண்டாம் நாள்
2ம் நாளில் வெறும் காய்கறிகளை மட்டும் சாப்பிட வேண்டும். எண்ணெய் விட்டு காய்கறிகளை சமைக்க விரும்பினால், ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம். ஆனால், வறுத்த, பொறித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அன்று நீங்கள் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மூன்றாம் நாள்
3ம் நாளில், பழம் மற்றும் காய்கறிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கு, வாழைப்பழம் சாப்பிடக்கூடாது. அன்று முழுவதும் நீங்கள் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நான்காம் நாள்
4ம் நாளில், பால் மற்றும் வாழைப்பழத்தை மட்டும் சாப்பிட வேண்டும். பாலில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை சேர்க்கக்கூடாது. மேலும், காய்கறி சூப் குடிக்கலாம். அன்று முழுவதும் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
ஐந்தாம் நாள்
5ம் நாள் அன்று உணவில் சாதம் கொஞ்சமாக சாப்பிடுங்கள். மேலும், 6 தக்காளியை சாப்பிடலாம். கோழி இறைச்சி, மீன் சாப்பிடலாம். பன்னீர் சாப்பிடலாம். அன்று நாள் முழுவதும் நீங்கள் தண்ணீர் மற்றும் பழச்சாற்றை குடிக்க வேண்டும்.
ஆறாம் நாள்
6ம் நாள் அன்று சாதம் மற்றும் கோழி, மீன் சாப்பிட வேண்டும். பச்சை காய்கறிகளை சாப்பிடலாம். உருளைக்கிழங்கை தவிர்க்க வேண்டும். அன்று பழச்சாறு அருந்தலாம்.
ஏழாம் நாள்
7ம் நாள் சாதம் எடுத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழச்சாறு குடிக்கலாம். அன்றைய தினம் நீங்கள் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கிரீன் டீ, கருப்பு காபி குடிக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |