லெமன் வாட்டர் குடித்து 32 கிலோ வரை குறைத்த இந்திய பெண்! எப்படி தெரியுமா? அவரே சொன்ன ரகசியம் இதோ
எடை அதிகரிப்பு என்பது இன்று இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஆரோக்கிய உணவு சாப்பிடுவதன் மூலமாகவும் யோகா மற்றும் எலுமிச்சை நீர் உதவியுடன் 32 கிலோ எடையை குறைத்து அன்ஷிகா பெரும் சாதனை செய்துள்ளார். அவர் எப்படி எடையை குறைத்தார் என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க..
PCOD போன்ற பிரச்சினைகளினால் எடை அதிகரிப்பு அதிகமாக இருக்கும். அன்ஷிகாவுக்கும் அதே பிரச்சினைதான் இருந்தது. அன்ஷிகா அவரது உணவு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் எடையை குறைக்க முடிவு செய்தார்.
சரியான வழியில் அதாவது ஆரோக்கியமான முறையில் எடையை குறைப்பது எப்படி என்று அன்ஷிகா கூறியுள்ளார். அவர் கூறியதாவது, தூங்க செல்வதற்கு முன் மற்றும் எழுந்த பிறகு நான் வெதுவெதுப்பான நீருடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் கலந்து குடிப்பேன்.
காலை உணவு: ஒரு சிறிய கிண்ணம் அளவு ஓட்ஸ் எடுத்து கொண்டு அதில் பால், சில பழங்கள், நாட்டு சர்க்கரை போன்றவை சேர்த்து சாப்பிடுவேன்.
மதிய உணவு: குறைந்த அளவில் உப்பு சேர்த்து வேகவைத்த பச்சை காய்கறிகளை உட்கொள்வேன்.
இரவு உணவு: முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஃப்ரூட் சாடை எடுத்து கொள்வேன்.
இரவு உணவிற்கு பின் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் பசி உணர்வை கட்டுப்படுத்த உதவும். இதனைத்தொடர்ந்து யோகா ஆசனங்கள், நடைபயிற்சி, ஸ்கிப்பிங், சிட் அப்ஸ் மற்றும் மாடிப்படி ஏறுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வேன்.
எந்தவித உடற் பயிற்சிக்கும் நான் செல்லவில்லை. பெரும்பாலும் வீட்டில் மட்டுமே உடற்பயிற்சி செய்வேன். உடல் எடையை குறைக்க சீக்கிரம் எழுந்து சீக்கிரம் படுக்கைக்கு செல்வது முக்கியமான மந்திரம். எடை அதிகரிப்பது என்பது மிகவும் எளிய விஷயம். ஆனால் எடையை குறைப்பது என்பது மிகவும் கடினம்.
எடை இழப்பு முயற்சியில் ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பாக இருப்பது எப்போதும் எடையை குறைக்க உதவும். என்னை யார் கேலி செய்தாலும் அதை பொருட்படுத்தாமல் எடை இழப்பு முயற்சியில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 4 மாதங்களில் 32 கிலோவை குறைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.