உங்களது உடல் எடை உடனே குறையணுமா?இந்த அற்புத பானத்தை தவறமால் குடிங்க போதும்!
தற்போது, உலகம் முழுவதும் உள்ள நான்கில் ஒரு பங்கு மக்கள் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள்.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள்.
இதற்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாததாலும், மோசமான வாழ்க்கை முறையும் காரணமாகும்.
உடல் எடை அதிகரிப்பது பல நோய்களையும் அதிகரிக்கிறது. இதற்காக வைத்தியசாலைக்கும், ஜிம்மிற்குமே பலர் ஓடி கொண்டிருக்கின்றனர்.
உடல் பருமனை கட்டுப்படுத்த பல எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று நெல்லிக்காய் டீ. இதனை தினமும் எடுத்து கொள்வது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் தேநீர் நம் உடல் எடையை குறைப்பதில் நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- நெல்லிக்காய் பொடி -
- இஞ்சி - 1/2 டீஸ்பூன்
- கருப்பு மிளகு - 1/4
- தண்ணீர் - 2 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.
அதன் பிறகு, அதில் ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடியை கலக்கவும்.
பின்னர் அதில் நான்கில் ஒரு பங்கு டீஸ்பூன் கருப்பு மிளகு மற்றும் அரை டீஸ்பூன் இஞ்சி கலந்து சுமார் 10-15 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதன் பிறகு, அந்த சாற்றை எடுத்து வடிகட்டவும். பிறகு வடிகட்டிய தேநீர் சற்று ஆறியவுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து மெதுவாக உட்கொள்ளவும்.
இந்த டீயை ஒரு நாளைக்கு 2 முறை குடித்து வந்தால், சில நாட்களில் உங்கள் கொழுப்பு கரைய ஆரம்பிக்கும்.
நன்மைகள்
- நெல்லிக்காய் டீ உடலுக்கு ஆற்றலைத் தருகிறது.
- கூடுதல் கலோரிகளை எரிக்கிறது.
- நார்ச்சத்து தேவையற்ற பசியை ஏற்படுத்தாது,
- நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுகிறது.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளதால், உடலில் ஏற்படும் வீக்கத்தை இது குறைக்கிறது.