உடல் எடையை குறைக்க தினமும் 10,000 அடிகள் நடக்க வேண்டுமா?
உடல் எடையை குறைக்க தினமும் குறைந்தது 10,000 அடிகலாவது நடக்க வேண்டுமா? பேசிக்கொண்டே வாக்கிங் செய்யக்கூடாதா? அல்லது நடக்கும்போது வேறு எந்த விடயங்களை எல்லாம் கவனிக்க வேண்டும்?
நடைப்பயிற்சி - விளையாட்டு மருத்துவ நிபுணர்கள் (Sports Medicine Specialists) கூறும் அறிவுரைகள்
நடைப்பயிற்சி செய்ய முறையான காலணிகள் அணிய வேண்டுமாம். நடைப்பயிற்சி செய்வதென்று தீவிரமாக முடிவுசெய்துவிட்டால், அதற்கேற்ப சரியான அளவில், சரியான குதிகால் சப்போர்ட் உள்ள ஷூக்களை கண்டிப்பாக அணியவேண்டும் என்கிறார்கள்.
நடைப்பயிற்சி செல்ல தளர்வான உடை அணிந்திருக்க வேண்டும். நடைப்பயிற்சி செல்லும்போது போத்தலில் தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டும். பகல் வேளையில் நடைப்பயிற்சி செல்பவர் என்றால் சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.
Maridav/Shutterstock
நடைப்பயிற்சி செய்யும்போது, நேராகப் பார்த்தபடி உடலை நிமிர்த்தி நடக்க வேண்டும், குதிகால்களிலிருந்து விரல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.
அதேபோல், கடமைக்கென நடக்ககூடாது. தனியாக நடக்க போரடித்தால் நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடக்கலாம் என அறிவுறுத்துகின்றனர்.
முதல்முறை
முதல்முறை நடைப்பயிற்சி செய்பவர்கள் என்றால், முதலில் 10 நிமிடங்களில் தொடங்கி, பிறகு 20 நிமிடங்கள், அடுத்து 30 நிமிடங்கள் என அதிகரிக்கலாம். முதல்நாளே நீண்ட தூரமோ, அதிக நேரமோ நடக்க நினைக்க வேண்டாம். அப்படிச் செய்தால் களைப்பாகி, கால்வலியால் அடுத்தநாளே வாக்கிங் செல்ல முடியாமல் போகலாம்.
Getty Images
10,000 அடிகள் நடக்க வேண்டுமா?
10,000 அடிகள் வாக்கிங் என்பது சமீப காலத்தில் டிரெண்டாக மாறிவருகிறது. தினமும் பத்தாயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் அவர்களை ஆக்டிவ்வான நபர் என்று விளையாட்டு மருத்துவ துறை கூறுகிறது.
ஆனால் எல்லோராலும் அப்படி ஒரேயடியாக நடக்க முடியாது. ஆரம்பத்தில் 5,000 அடிகள் நடக்கலாம். அடுத்து ஆயிரம் ஆயிரம் அடிகளாக கூட்டலாம். பிறகு 10,000 அல்ல, முடிந்தால் அதற்கும் அதிகமாகவும் நடக்கலாம். 12,500 அடிகளுக்கு மேல் நடப்பவர்களை சூப்பர் ஆக்டிவ் நபர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
Pinterest
எடை குறைய நடைப்பயிற்சி மட்டும் போதுமா?
நடைப்பயிற்சி மட்டும் செய்தே உடல் எடையைக் குறைக்கலாம். ஆனால், உங்களுடைய இலக்கை வெறும் எடைக்குறைப்போடு நிறுத்திக்கொள்ளாமல், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கானதாகவும் விரிவுபடுத்தினால்தான் உடல் உறுதியாகும். அதற்கு நடைப்பயிற்சியோடி சேர்த்து, வேறு சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.