தொப்பை அதிகமா இருக்கா? இந்த தண்ணீர் மட்டும் குடித்து பாருங்க!
பொதுவாகவே பெண்கள் அதிகமாக சந்திக்க நேரிடும் ஒரு பிரச்சினை தொப்பை தான். விருப்பான ஆடை அணிய முடியாமல் கவலையில் இருப்பார்கள்.
ஆகவே வயிற்றில் இருக்கும் தொப்பையை எப்படி மின்னல் வேகத்தில் குறைக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் கிடைக்கும்.
ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றினால் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.
இந்த ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடித்தால் தொப்பை குறையும்.
ஓமத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. மேலும் ஓமத்தை விட ஓமம் கலந்த தண்ணீர் உடலிற்கு பல்வேறு நன்மையை தரும்.
ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.
- மாதவிடாயின் போது வயிற்று வலி உள்ள பெண்களுக்கு ஓமம் தண்ணீர் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-
பெண்களில் கர்ப்பத்திற்குப் பிறகு, உடலில் சமமான இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இதை குடிக்கலாம்.
ஆகவே இந்த முறையில் ஓமம் கலந்த தண்ணீரை குடித்து வர உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரைந்து, தொப்பையும் குறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.