மடமடனு எடை குறையனுமா..! ஏன் நீங்க இப்படி Try பண்ணக்கூடாது?
பொதுவாகவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி அனைவரும் பொதுவாக எதிர்க்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது எடை அதிகரிப்பு தான்.
ஒரு சிலர் சாப்பிடுவதால் உடல் எடையானது அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சாப்பிடாமல் இருப்பதாலும் எடையானது அதிகரித்துக்கொண்டு செல்லும்.
இதற்காக பலரும் பல முறைகளை பின்பற்றி உடல் எடையை குறைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சந்தையில் விற்கப்படும் செயற்கை முறையில் உற்பத்தியான மருந்துகளை வாங்கி எடுத்துக்கொள்வதார் உடல் ரீதியாக பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
ஆகவே இயற்கையான முறையில் எப்படி உடலில் உள்ள எடையை குறைக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடையானது சீக்கிரமாக குறைந்து விடும்.
சூடான நீர் + எலுமிச்சை சாறு
தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சம்பழ நீரை அருந்தினால் உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.
ஆனால் இதை சரிவர செய்ய வேண்டும். அதாவது எலுமிச்சை நீரை குடிக்கவும் சரியான வழியும் நேரத்தில் குடிக்கவும் விதிகள் உள்ளது.
எலுமிச்சை தண்ணீர் குடிக்க சரியான வழி மற்றும் சரியான நேரம்
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதை உட்கொள்ளும்போது உடல் எடையானது விரைவாக குறையும்.
தினமும் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிப்பதால் உடல் எடை கட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம்.
சருமம், கூந்தல் உட்பட உடலின் பல பாகங்களுக்கு நன்மை வழங்கும். எலுமிச்சம்பழம் கலந்த வெதுவெதுப்பான நீரை குடிப்பதால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு வெளியேறும்.
மேலும் இதை காலையில் எழுந்தவுடன் ஒரு கப்பில் சூடான நீர் எடுத்து அதில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்க எடை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |